பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

monochrome adapter

953

monographics adapter


பின்புறத்தில் ஒரு நிறத்தையும் காட்டுவது. சான்றாக, வெண்மையின்மீது கறுப்பு, கறுப்பின்மீது வெண்மை, கறுப்பின்மீது பச்சை.

monochrome adapter : ஒற்றை நிறத் தகவி : ஒரேயொரு முன் புல நிறத்தில் ஒளிக்காட்சிக் சமிக்கையை உருவாக்கும் திறனுள்ள ஒர் ஒளிக்காட்சி ஏற்பி. சிலவேளைகளில் ஒற்றை நிறத்தையே வெவ்வேறு அடர்வு களில் காண்பிக்கும், சாம்பல் அளவீட்டைப் போன்றது.

monochrome card : ஒரு நிறப்பட அட்டை;ஒரே நிற அட்டை : கணினியின் விரிவாக்கத் துளை விளிம்பில் பொருந்துகிற சுற்று வழி அட்டை. இது ஒரே நிறக் குழுஉக் குறிகளை உண்டாக்கும். பயன்படுத்தப்படும் காட்சித் திரையைப் பொறுத்து இது, வெள்ளை/அம்பர்/பச்சை நிறச் சாயல்களை உண்டுபண்ணும்.

monochrome display : ஒற்றை நிறத் திரைக்காட்சி : 1. ஒற்றை நிறத்தில் மட்டுமே தோன்றும் ஒளிக்காட்சித் திரைக்காட்சி. அந்த ஒற்றைநிறம், பயன்படுத் தப்படும் பாஸ்பரைப் பொறுத்தது. அனேகமாக பச்சை அல்லது ஆம்பர் நிறமாக இருக்கும். 2. ஒரே நிறத்தையே வெவ்வேறு அடர்வுகளில் காண்பிக்கும் திறன்பெற்ற திரைக்காட்சி.

monochrome monitor : ஒரே நிறக் காட்சித்திரை;ஒரே நிறத் திரை : மாறுபட்டதொரு கறுப்பு வண்ணம் பின்னணியில் தனியொரு வண்ண (வெள்ளை, அம்பர், அல்லது பச்சை) எழுத்துகளைக் காட்சியாகக் காட்டும் ஒரு தனிவகைக் காட்சித்திரை. இதனால் மிகக் கூர்மை வாய்ந்த தெளிவான காட்சி உருவாகிறது. எனவே மிகஎளிதாகப் படிக்க முடிகிறது. பெரும்பாலும் சொல்செயலி பயன்பாடுகள், வணிகப் பொறியமைவுகள் கல்விச் சாதனங்கள் போன்ற கணினி சேர் முனையங்கள் பல மணி நேரம் தேவைப்படுகிற, ஆனால் பல வண்ணக்காட்சிகள் தேவைப்படாத பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

monochrome printer : நிற அச்சகப்பொறி.

monodic boolean operator : ஏக பூலியன் இயக்கர்;ஏக பூலியன் செயற்குறி.

monographics adapter : ஒற்றை வரைகலைத் தகவி : ஒற்றைநிற உரை மற்றும் வரைகலைப் படங்களை மட்டுமே காட்ட முடிகிற ஒளிக்காட்சித் தகவி.