பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/957

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

MOS

956

motherboard


தொலைபேசி வருவதற்கு முன்பு தந்தி மூலம் செய்திகளை அனுப்ப இது பயன்பட்டது.

MOS : எம்ஓஎஸ் : உலோக ஆக்சைடு அரைக்கடத்தி திண்மப் பொருள் எனப் பொருள்படும் 'Metalic Oxide Semiconductor' என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்து குறும்பெயர்.

mosaic : மொசைக் : வைய விரி வலை, பிரபலமாவதற்கு முக்கிய காரணமான வரைகலை வலை மேலோடி. என்சிஎஸ்ஏவில் எழுதப்பட்டது.

MOS device : மோஸ் சாதனம் : 'போர்ன்'வகைப் பொருளில் தனி வழித் தடத்தில் மின்சாரம் ஒட அனுமதிக்கும் சாதனம். வழித் தடப்பகுதியில் இன்சுலேட் செய்யப்பட்ட எலெக்ட்ரோடு மூலம் இது கட்டுப் படுத்தப்படு கிறது.

ΜΟSFΕΤ : மாஸ்ஃபெட் : 'உலோக ஆக்சைடு அரைக்கடத்தித் திண்மப் பொருள் புல விளைவு மின்மப் பெருக்கி' என்று பொருள்படும் 'Metallic Oxide Semiconductor Field Effect Transistor" என்ற ஆங்கில பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்

MOS/LSI : எம்ஓஎஸ்/எல்எஸ்ஐ;பார்க்க : உலோக ஆக்சைடு அரைக் கடத்தித் திண்மப் பொருள் (Metallic Oxide Semiconductor), பேரளவு ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பம் (Large Scale Integration Technology).

most significant bit : மிகு மதிப்பு பிட் : எண்ணின் ஒன்று அல்லது மேற்பட்ட பைட்களின் (bits) ஒர் இரும தொடர்ச்சியான துண்மிகளின் வரிசையில் அதிக இட மதிப்புக் கொண்ட துண்மி (bit). (அடையாள துண்மியைத் தவிர்த்து).

most significant character : மிகு மதிப்பு எழுத்து : ஒரு சரத்திலுள்ள இடது ஒர எழுத்து. MSC என்பது இத்தொடரின் சுருக்கம்.

Most Significant Digit (MSD) : மிக முக்கிய இலக்கம் : ஒர் எண்னில் மிகப்பெரும் மதிப்பினை அல்லது முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இலக்கம். எடுத்துக்காட்டாக 58371 என்ற எண்ணில் மிகப்பெரும் முக் கியத்துவம் வாய்ந்த இலக்கம் 5.

motherboard : தாய்ப்பலகை;தாய் இணைப்புப் பலகை;தாய் இணைப்பு :

மின்சுற்றுவழி அட்டைகள் பலகைகள் அல்லது தகவமைவுகள் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பலகை. ஒரு நுண் கணிப்பொறியின் தலையாய