பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/958

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

motif

957mouse


தாய்ப் பலகை

மின்சுற்று வழிப்பலகை. இதனைப் பொறியமைவுப் பலகை. பின்தளப் பலகை என்றும் கூறுவர்.

motif : மோட்டிஃப் : ஒப்பன் மென்பொருள் ஃபவுண்டே ஷன் அங்கீகரித்த வரைகலை பயனாளர் இடைமுகம்.

motion capture : அசைவுப் பதிவு.

motion JPEG : நகர்வு ஜேபேக் : நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரையறை. ஒளிப்பட வல்லுநர். குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத் தையும் ஜேபெக் தர வரையறைப்படி இறுக்கிச் சுருக்கும்.

motion path : ஓடும் பாதை : உயிர்ப்படப் பொருள் ஒன்று பின்பற்ற வேண்டிய பாதை.

motor : விசைப்பொறி.

motorola : மோடோரோலா : நுண் செயலிகள் உட்பட மின்னணுவியல் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம்.

mount : பொருத்து; நிறுவு : ஒரு கணினி யில் பொருத்தப் பட்ட ஒரு வட்டினை அல்லது நாடாவை கணினி அடையாளங் கண்டு அவற்றை கோப்பு முறைமையில் இணைத்துக் கொள்ளும்படி செய்தல். இச்சொல் பெரும்பாலும் ஆப்பிள் மெக்கின்டோஷ் மற்றும் யூனிக்ஸ் அடிப்படையிலான கணினிகள் வட்டுகளை அணுகச் செய்வதைக் குறிக்கப் பயன்படுகிறது.

mouse : எலி வடிவச் சாதனம்; சுட்டு நுண்பொறி; சுட்டுக் கருவி : சுட்டி காட்சித் திரையில் ஒரு சறுக்குச் சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும். நகர்த்துவதற்குப் பயன் படும் சாதனம். ஒரு நுண்பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில் நகர்த்தக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்