பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/960

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mouse button

959

move



டோஷ் கணினிகளில் ஆப்பிள் டெஸ்க்டாப் பாட்டைத் துறை யைக் குறிக்கும்.


mouse sensitivity : சுட்டி உணர்வு : சுட்டியின் நகர்வுக்கும் திரையில் காட்டியின் (Cursor) நகர்வுக்கும் இடையேயுள்ள உறவு. அதிக உணர்வுள்ள சுட்டியை அதிக தொலைவு நகர்த்தினால்தான் திரையில் காட்டி (cursor) சிறிது தொலைவு நகரும். சுட்டிக்கான இயக்கி நிரலில் உணர்வினைக் கூட்டி னால் திரையில் காட்டி மெதுவாக நகரும். இதனால் பயனாளர் தம் விருப்பப்படி காட்டியை நகர்த்த முடியும். கேட்/கேம் (CAD/CAM) பணிகளில் துல்லிய தன்மைக்கு அதிக உணர்வுள்ள சுட்டி உகந்தது.


mouse trails : சுட்டிச் சுவடுகள் : சுட்டியை நகர்த்தும்போது திரை யில் நகரும் சுட்டிக் குறி (mouse pointer) நகர்ந்து வந்த பாதையில் தெரிகின்ற சுவடுகள். மடிக் கணினி, கைஏட்டுக் கணினி ஆகியவற்றில் சுட்டிச் சுவடுகள் மிகவும் பயன்படும். ஏனெனில் அவற்றில் இயங்கா அணித்திரைக் காட்சி (passive matrix display) முறை உள்ளது. சுட்டிக் குறி நகர்வது, சுவடுகள் இருந்தால்தான் நன்கு தெரியும். பழைய ஒற்றைநிறத் திரைகளுக்கும் சுவடுகள் இருப்பின் நல்லது. விண்டோஸ் இயக்க முறைமையில் தேவையெனில் சுவடுகள் தெரியும்படி வைத்துக் கொள்ளலாம்.


. mov : . எம்ஓவி : ஆப்பிளின் குவிக்டைம் வடிவிலுள்ள திரைப்படக் கோப்புகளின் வகைப் பெயர்.


movable head disk unit : நகரும் முனையுடைய வட்டு அலகு : நகரும் முனை வட்டகம் : இது ஒரு சேமிப்புச் சாதனம் அல்லது பொறியமை. இதில் கவிந்த முறையில் முலாம் பூசிய வட்டுகள் அடங்கியுள்ளன. இந்த வட்டுகளால் பரப்பில் தரவு இரும எண் தரவு முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ள காந்தப் புள்ளிகளின் வடிவில் சேமித்து வைக்கப்படுகின்றன. தரவு, வட்டுகளைச் சுற்றி வட்டப் பாதைகளில் அமைக்கப் படுகின்றன. வட்டுகளில் தேவையான வட்டப் பாதையில் எந்திர முறையில் நகர்த்தக்கூடிய தலைக் கரங்களை ஒடவிட்டுப் படிக்கவும் எழுதவும் செய்யலாம்.


move நகர்த்தல்; நகர்வு : 1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில்