பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/961

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

move/copy

960

ΜΡΕG-1



ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை மாற்றுதல்.


move/copy நகர்த்தல்/நகலெடுத்தல்.


movescopy sheet : தாள் நகர்த்து/ நகலெடு.


movement of arm : புயத்தின் இயக்கம்.


moving average : நகரும் சராசரி; மாறும் சராசரி : ஒரு தரவுத் தொடர் வரிசையில் குறிப்பிலா மாற்றத்தின் ஏற்ற இறக்கச் சராசரியைக் கணித்திடும் முறை. இதன்படி தொடர் வரிசையில் மிக அண்மைக்குரிய வரலாற்றுத் தரவுகளே பயன் படுத்தப்படுகின்றன. தொடர் வரிசையில் தரவுகளில் ஏற்படும் மாற்றத்தையொட்டி இது மாறு வதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தச் சராசரி சிறு சிறு ஏற்றத்தாழ்வுகளால் மறைந்து விடக்கூடிய போக்குகளைக் காட்டும்.


moving molecules : நகரும் மூலக்கூறு : இந்திய எஸ். சி. எஸ். அல்லது பி. பி. சி. அக்காரன் கணினிக்கான கல்வி மென் பொருள். அழுத்தம் மற்றும் வானிலையின் மாற்றங்கள் எவ்வாறு மூலக்கூறுகளின் இயக்கத்தைப் பாதிக்கின்றன என்பதைக் காட்டும் யூனிக்கார்ன்.


mozilla : மோசில்லா : நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 'Read me' கோப்பின்படி நெட்ஸ்கேப் என்ற சொல்லின் உச்சரிப்பு இப்படித்தான் அமையும்.


. mpeg : . எம்பெக் : எம்பெக் (MPEG) வடிவில் அமைந்த வரைகலைப் படிமக் கோப்புகளை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர். (MPEG-Moving Pictures Experts Group).


MPEG : எம்பெக் : 1. திரைப்பட வல்லுநர்கள் குழு எனப் பொருள்படும் Moving Pictures Experts Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவல்களை இறுக்கிச் சுருக்குவதற்கான தரவரையறைகள். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஐஎஸ்ஓ/ஐஇசி கூட்டுத் தொழில் நுட்பக்குழு உருவாக்கியவை. எம்பெக் தர வரையறை பல்வகைப்பட்டவை. வெவ்வேறு சூழ்நிலைகளில் செயல்படுவதற்கென வடி வமைக்கப்பட்டவை.


MPEG-1 : எம்பெக்-1 : சி. டிரோம் தொழில்நுட்பத்துக்கான மூல எம்பெக் தர வரையறை. ஒளிக் காட்சி மற்றும் கேட்பொலித் தரவுகளைச் சேமிக்கவும் மீட்