பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/962

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ΜΡΕG-2

961

ΜΡΟΑ



டெடுக்கவும் வடிவமைக்கப்பட்டது. 1. 5 எம்பிபீஎஸ் வரையிலான நடுத்தர அலைக் கற்றை இரண்டு கேட்பொலித் தடங்கள், பின்னலுறா ஒளிக்காட்சி ஆகியவற்றை எம்பெக்-1 வரையறுக்கிறது.


MPEG-2 : எம்பெக்-2 : எம்பெக்-1 தர வரையறையின் நீட்டித்த வடிவம். தொலைக்காட்சி அலைபரப்புக்காக (ஹெச்டி டீவி உட்பட) வடிவமைக்கப்பட்டது. 40 எம்பிபீஎஸ் வரை யிலான உயர்நிலை அலைக் கற்றையை, ஐந்து கேட்பொலித் தடங்கள், பலதரப்பட்ட சட்ட அளவுகள் மற்றும் பின்னலுறு ஒளிக்காட்சிகளை வரையறுக்கிறது.


MPEG-3 : எம்பெக்-3 : தொடக்கத்தில் உயர் வரையறைத் தொலைக்காட்சிக்கான (HDTV) எம்பெக் தர வரையறையாகும். ஆனால் இதற்குப் பதிலாக எம்பெக்-2 பயன்படுத்த முடியும் என்பதால், எம்பெக்-3 மதிப்பிழந்தது.


MPEG-4 : எம்பெக்-4 : ஒளிக்காட்சித் தொலைபேசிகள் மற்றும் பல்லூடகப் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்படும் தர வரையறை. எம்பெக்-4 64 கேபிபீஎஸ் வரையிலான அடிநிலை அலைக்கற்றையை வழங்குகிறது.


. mpg : . எம்பீஜி : எம்பெக் குழுவினர் வரையறுத்த வடிவமைப்பைப் பயன்படுத்தி இறுக்கிச் சுருக்கப்பட்ட கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலைக் கொண்ட, குறியாக்கம் செய்யப் பட்ட தகவல் தாரைகளை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர்.


ΜΡ/Μ : எம்பீ/எம் : நுண்கணினிகளுக்கான பல்பணி நிரல் எனப் பொருள்படும் Multi tasking Programme for Micro Computers என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சிபி/எம் இயக்கமுறைமையின் பல்பணி பல்பயனாளர் பதிப்பாகும்.


MPOA : எம்பீஒஏ : ஏடிஎம் வழியாக பல் நெறிமுறை என்று பொருள்படும் Mufti Protocol Over ATM என்ற குரும்பெயர் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஏடிஎம் குழுமுன்வைத்த வரன் முறையாகும் இது. (ஏடிஎம் என்பது ஒத்திசையா பரிமாற்றல் பாங்கு என்று பொருள்படும் Asynchronous Transfer Mode என்பதன் சுருக்கம். ஏடிஎம் பயனாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்த அமைப்பே ஏடிஎம் குழு). தற்