பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/966

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

muiti address

965

multifinder



multi address : பன்முக முகவரி : ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிப் பகுதி அடங்கிய ஒர் அறிவுறுத்தப் படிவம்.


multibus : பல்வேறு வழித்தடம் : இராணுவம், தொழில்துறை மற்றும் விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தடையக் கட்டுமான அமைப்பு. செய்தி அனுப்புதல், தானாக அமைத்துக் கொள்ளுதல் மற்றும் மென்பொருள் தலையீடுகள் உள்ளடக்கியது.


multi cast : பலரறியப் பரப்புதல்; பல் பரப்பல்.


multicast-backbone : பல்முனைப் பரப்பு முதுகெலும்பு.


multicasting : பல்முனைப் பரப்புகை : ஒரு பிணையத்தில், ஒரே நேரத்தில் ஒரு செய்தியை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளுக்கு அனுப்பி வைக்கும் செயல்முறை.


Multi computer system : பன்முகக் கணினியமைவு; பல் செயல் கணினியமைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மையச் செயலகம் (CPU) அமைந்துள்ள கணினியமைவு.


multics : மல்டிக்ஸ் : மேக் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட பன்முக அணுகு இயக்க அமைப்பு மற்றும் டிரேட்மார்க்.


multidimensional : பல்பரிமாண.


multidimensional array : பல் பரிமாண வரிசை : இரண்டு அல்லது மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்ட வரிசை.


multidrop line : பன்முகப்படி வரி; பன்முனைத் தொடல் : பல் சேர் முனையங்களை இயக்குவதற்கு ஒரேயொரு வழியை அல்லது வரியைப் பயன்படுத்தும் செய்தித் தொடர்புப் பொறியமைவுத் தொகுதி. இதனை பன்முக முனைவரி என்றும் கூறுவர். இது 'வரிக்கு வரி' என்பதற்கு மாறுபட்டது.


multidrop network : பன் முனையப் பிணையம்.


multifile sorting : பன்முகக்கோப்பு வகைப்படுத்துதல்; பல் கோப்பு வரிசைப்படுத்தல் : ஒவ்வொரு கோப்புக்கும் தனித் தனி நிலையளவுருக்களின் அடிப்படையில், இயக்குபவர் தலையீடின்றி இயக்கக்கூடிய, ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை வகைப்படுத்தக்கூடிய தானியங்கு வரிசை முறை.


multifinder : பல்பணி இயக்கி; மல்ட்டி ஃபைண்டர் : ஆப்பிள் மெக்கின்டோஷின் ஃபைண்டர்