பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/967

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multi frequency monitor

966

multihosting



பயன்பாட்டின் ஒரு பதிப்பு. பல்பணிகளை ஒரே நேரத்தில் இயக்க வழிசெய்யும். ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாடுகள் நினைவகத்தில் தங்கியிருக்க வகை செய்வதே இதன் முதன்மையான பயன். ஒற்றைச் சுட்டிச் சொடுக்கில் பயன்பாடுகளுக்கிடையே மாறிக் கொள்ளலாம். ஒரு பயன்பாட்டிலுள்ள தரவுவை இன்னொன்றுக்கு நகல் எடுக்கலாம். இயக்கத்தில் இருக்கும் பயன்பாடு மெய்யான பல பணிச் செயல்பாட்டை அனுமதிக்குமெனில் பின்புலத்தில் வேறொரு பணியை இயக்க முடியும்.


multi frequency monitor : பல் அலையெண் கணித்திரை : ஒரு எல்லையில் உள்ள அனைத்து அலை எண்களுக்கும் அனுசரித்துச் செல்லும் காட்சித்திரை அல்லது வி. ஜி. ஏ. மற்றும் சூப்பர் வி. ஜி. ஏ. போன்ற குறிப்பிட்ட அலை எண் தொகுதிகளுக்கும் ஏற்புடையது.


multi function board : பன்முகச் செயற்பணிப் பலகை; பல் செயற்பலகை : ஒரு கணினியமைவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புதிய திறம்பாட்டினை அளிக்கக்கூடிய செருகிகளைக் கொண்ட சாதனம். எடுத்துக் காட்டு : கடிகாரம் /நாட்காட்டி நினைவக விரிவாக்கப் பலகை அல்லது ஒருபோகு/தொடர் இடைமுகப்பு.


multi-hop transmission : பல் தாண்டு பரப்புதல் : மின்னணு மண்டலத்தின் செயற்போக்கு. அதன் வழியாக ஒரு வானொலி அலை பரப்பப்படும்போது, அலையில் அலையெண்ணைப் பொறுத்தே அது அமையும். குறைந்த அலையெண்களில், மின்னணு மண்டலம் அதிக மின்கடத்தி ஊடகமாகப் பயன்பட்டு குறைந்த ஒப்புடன் குறைந்த அளவில் உள்ள எந்த சமிக்கையையும் அனுப்பும். பூமியிலிருந்தும் மின்னணு மண்டலத்தின் கீழ்ப்பகுதியிலிருந்தும் பிரதிபலித்து VLF அல்லது LF சமிக்கைகளை நீண்ட தூரத்துக்கு பிரதிபலித்தல் மூலம் அனுப்ப முடியும்.


multihosting : பல் விருந்தோம்பல் : பல்முனை ஐ. பி. முகவரிகளுக்கு முகவரியிடப்பட்ட பொதிகளை கணினி ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுவதில் ஒருமுறை. எந்த முகவரிக்குப் பொதி அனுப்பப்பட வேண்டியிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்தவுடன், ஒரு தனி எந்திரத்தின் மூலமே பல சர்வர்களின் செயல்களை மாயமாகச் செய்ய முடியும்.