பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/969

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multimedia PC

968

multi-path propagation



தல், உயிர்ப்பட திரும்பல், ஜாய்ஸ்டிக், மிடி, சிடி ரோமுக்கான எம். சி. ஐ. இடைமுகங்கள், ஒளிக்காட்சி வட்டுகள், ஒளிக் காட்சி நாடாக்கள் போன்ற வற்றுக்குப் பயனுள்ள விண்டோ வழமைகள்.


multimedia PC : பல்லூடக பீசி (கணினி) : பல்லூடக வசதி பெற்ற சொந்தக் கணினி. இதற்கான மென்பொருள், வன் பொருள் தர அளவீடுகளை பல்லூடக பீசி விற்பனைக் குழு (Multimedia PC Marketing Council) நிர்ணயம் செய்துள்ளது. ஒரு பீசியின் ஒலி, ஒளிக்காட்சி, சிடி-ரோம் இயக்கத் திறன்களின் குறைந்தபட்ச அளவீடுகளை இது வரையறுத்துள்ளது.


multinode computer : பல்கணு கணினி : பல செயலிகளைப் பயன்படுத்தும் ஒரு கணினி. மிகச் சிக்கலான பணியில் கணக்கீடுகளை இவை பகிர்ந்து கொள்ளும்.


multipart forms : பல்பகுதி படிவங்கள்; பல்லடுக்குப் பல்தாள் படிவங்கள் : கணினியில் தொட்டச்சுப் பொறிகளில் (impact printers) அச்சுக்குப் பயன்படுத் தப்படும் ஒருவகைத்தாள் தொகுதி. இரு தாள்களுக்கிடையே கரியத்தாள் (carbon paper) இருக்கும். அல்லது ஒவ்வொரு தாளின் பின்பக்கமும் ஒருவகை வேதிப்பொருள் பூசப் பட்டிருக்கும். இது கரியத்தாள் போன்றே செயல்படும். கடைசித் தாளில் இப்பூச்சு இருக்காது. ஒரே அச்சில் பல படிகளை எடுக்க இத்தாள் பயன்படுகிறது. ஒரு தொகுதி யில் மொத்தம் எத்தனை படிகள் எடுக்க முடியும் என்பதைக் கொண்டு இத்தாளின் பல்லடுக்கு (multipart) கணக்கிடப்படுகிறது.


multipass : பன்முக ஓட்டம் : மிகவும் சிக்கலான ஒரு பணியை ஒரே ஒட்டத்தில் செய்ய முடியாதிருக்கும்போது, ஒரே தரவுவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஒடவிட்டு அதனை முழுமையாகச் செய்யும்முறை.


multipass sort : பன்முக ஓட்ட வகைப்படுத்தல்; பல ஒட்ட வரிசையாக்கம் : ஒரு மையக் கணினி இடைநிலைச் சேமிப்பியின் உள்முக நினைவகத்தில் அடங்கியுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை வகைப்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட வகைப்படுத்தும் செயல் முறை.


multi-path propagation : பல்-பாதை பரப்புதல் : வான-அலை வானொலி இணைப்பின் இறுதியில் வந்து சேரும் வானொலி அலைகள், மின்னணு மண்டலத்தில் இரண்டு அல்லது மேற்