பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/974

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multiprocessor computer

973

multisync monitor



செயலகங்களைக் கொண்ட கணினி இணைவனம்.


multiprocessor computer systems : பல்செயலக கணினி அமைப்புகள் : மையச் செயலக வடிவமைப்புக்கு பல்செயலக அமைப்பு முறையைப் பயன் படுத்தும் கணினி அமைப்புகள். ஆதரவு நுண் செயலகங்கள் பல்லாணைச் செயலகங்கள் மற்றும் இணைச் செயலக வடிவமைப்புகள் ஆகியவைகளை உள்ளடக்கியது.


multiprogramming : பன்முகச் செயல் முறைப்படுத்தல் : ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல்முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித்தனிப் புற நிலைச் சாதனங்களும் உள்ளன. இவை அனைத்தும் மையச் செயலக அலகைப் பகிர்ந்து கொள்கின்றன. மையச் செயலக அலகைவிடப் புறநிலைச் சாதனங்கள் மெதுவாகச் செயற்படுகின்றன. இதனால் இது சிக்கனமானது. பெரும்பாலான செயல்முறைகள், தங்கள் நேரத்தைக் கடைசி வரை உட்பாட்டுக்காக /வெளிப்பாட்டுக்காகக் காத்திருந்து கழிக்கின்றன. ஒரு செயல்முறை காத்திருக்கும்போது, இன்னொரு செயல் முறை, மையச் செயலக அலகைப் பயன்படுத்திக் கொள்கிறது.

multi reel file : பல்சுருள் கோப்பு.


muitireel sorting : பன்முகச் சுருணை வகைப்படுத்தல் : ஒன்றுக்கு மேற்பட்ட உட்பாட்டு நாடாவைக் கொண்டுள்ள ஒரு கோப்பின் தானியங்கி வரிசைமுறை.


multiscan monitor : பன்முக வருடு திரை; பன்முக நுண்ணாய்வு முகப்பு : ஒரு எல்லைக்குள் உள்ள அனைத்து அலை வரிசைகளுக்கும் அனுசரித்துப் போகும் காட்சித்திரை.


multistar network : பன்முக விண்மீன் பிணையம் : தரவு செய்தித் தொடர்புகளின் பிணையம். இதில் பல தாய்க் கணினிகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தாய்க் கணினியும் சிறிய கணினிகளின் நட்சத்திரத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கின்றன.


multi syllabus approach : பன்முகப் பாடத்திட்ட அணுகுமுறை.


multisync monitor : பல் ஒத்திசைவுத் திரையகம் : பலதரப்