பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/976

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multiuser

975

MUP




சேர்ந்தியங்கும் ஒலி ஒளி பயன் பாடுகளை உருவாக்கவும் இது தேவைப்படும். திரும்ப வரும் குறியீட்டுமுறை இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


multiuser : பல் பயனாளர் : இரண்டு அல்லது மேற்பட்ட பயனாளர்கள் சேர்ந்தியங்கும் கணினி.


multiuser DOS : பல் பயனாளர் டாஸ் : ஒரு தனி பி. சி. யிலிருந்து பல ஊமை முனையங்கள் இயங்க அனுமதிக்கும் டாஸ் - ஏற்புடை இயக்க அமைப்பு. டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனம் இப்பணியில் 10 முகப்புகள் / பி. சி. க்களைப் பயன்படுத்தி 386 எஸ்எக்ஸ் மையச் செயலகம் அல்லது உயர் எந்திரங்களை இயக்க முடியும். Concurrent DOS-ஐ நீக்கி இது ஏற்படுத்தப் பட்டது.


multi user file processing : பல் பயனாளர் கோப்புச் செயலாக்கம்.


multiuser systems : பலர் பயன் படுத்தும் பொறியமைவுகள்.


multi variate : மல்டி வேரியேட் : பல மாறிலிகளை எதிர்கால முரைக்கும் மாதிரியில் பயன் படுத்துவது.


multi view ports : பன்முகக் காட்சித் திரைகள் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட காட்சித்திரைகளைக் காட்டும் திரைக்காட்சி. இந்தக் காட்சித் திரைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருப்பதில்லை.


multi volume file : பல தொகுதிக் கோப்பு : மிகப்பெரிய கோப்பு. இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டுத் தொகுதி, சுருணை, அல்லது காந்த நாடா தேவைப்டும்.


multiway branching : பல்வழி கிளை பிரித்தல்.


MUMPS : மம்ப்ஸ் : மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைப் பயன் பாட்டுச் செயல்முறைப்படுத்திப் பொறியமைவு எனப் பொருள்படும் "Massachusetts - General Hospital Utility Program ming System" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இது, குறிப்பாக மருத்துவ ஆவணங்களைக் கையாள்வதற்காக வடி வமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி. தரவு மேலாண்மையிலும் வாசகங்களைக் கையாள்வதிலும் இந்த மொழி வெகுவாகப் பயனுடையது.


MUP : மியூபி : நுண் செயலி என்று பொருள்படும் 'Micro processor' என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம். (μ என்பது