பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/982

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

981


National Attachment Point

981

National Science Foundation

Network Address Translation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அக இணையம் (Intranet) அல்லது| பிற தனியார் பிணையங்களுக்குள் பயன்படுத்தப்படும் ஐபீ முகவரிகளையும் இணையத்தின் ஐபீ முகவரிகளையும் பெற இந்த அணுகுமுறை உதவுகிறது.

National Attachment Point : தேசிய இணைப்பு முனை : அமெரிக்காவில் தேசிய அறிவியல் கழகத்தினர் (National Science Foundation) இணையப் போக்குவரத்துக்கு அமைத்த நான்கு இணைப்பக முனைகளில் ஒன்று. இணையச் சேவையாளர்கள் தங்களுடைய பிணையத்தை ஏதேனும் ஒரு தேசிய இணைப்பு முனையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் பிற இணையச் சேவையர்களுடன் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும். நான்கு தேசிய இணைப்பு முனைகள் இருக்குமிடங்கள். (1) சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப்பகுதி (பசிபிக் பெல் நிறுவனம் இயக்குகிறது) (2) சிகாகோ (அமெரிடெக் நிறுவனம்) (3) நியூயார்க் (ஸ்பி ரின்ட் நிறுவனம்) (4) வாசிங் டன் டி. சி. (என் எஃப்எஸ் அமைப்பு).

National information Infrastructure : தேசிய தகவல் உள்கட்டமைப்பு : வருங்கால உயர் அகல்கற்றை (Broad Band) விரிபரப்புப் பிணையம். அமெரிக்க அரசு முன்வைத்துள்ள திட்டம். அமெரிக்கா முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு தரவு, தொலைநகல், ஒளிக்காட்சி மற்றும் குரல் ஆகியவற்றை எடுத்துச் செல்லும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இப்பிணையத்தை நிறுவ உள்ளன. இணையத்தில் கேட்டவுடன் ஒளிக்காட்சி கிடைக்கக்கூடிய சேவையை பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இத்தேவை தனியார் நிறுவனங்களை இத்திசை நோக்கித் தூண்டும் என அமெரிக்க அரசு கருதுகிறது. இதன்மூலம் கிடைக்கக்கூடிய சேவைகள் என முன் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சேவைகள் இணையத்திலேயே இப்போது கிடைக்கத் தொடங்கி விட்டன.

National Science Foundation : தேசிய அறிவியல் கழகம் : அமெரிக்க அரசின் முகமை. அறிவியல் ஆய்வுக்கென அமைக்கப்பட்டது. ஆய்வுத் திட்டப் பணிகளுக்கும் அறிவியல் தகவல் தொடர்புத் திட்டப்