பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/983

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

982


native

982

native mode

பணிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. முன்னாளில் இணையத்தின் முதுகெலும்பாய் விளங்கிய என்எஸ்எஃப்நெட் இதன் படைப்பே.

native : உள்ளார்ந்த : தொடக்கத்தில் இருந்த வடிவில் நிலவக்கூடிய ஒன்றின் பண்புக்கூறு. (எ-டு) மென்பொருள் பயன்பாடுகள் பல்வேறு கோப்பு வடிவங்களைக் கையாளும் திறன் படைத்தவை. ஆனாலும் அவை உள்ளார்ந்த நிலையில் தன் சொந்த வடிவமைப்பையே பயன்படுத்திக் கொள்கின்றன. வேறு வடிவமைப்பில் உள்ள கோப்புகள் பயன்பாட்டு மென் பொருளின் உள்ளார்ந்த வடிவமைப்புக்கு மாற்றப்பட வேண்டும்.

native application : உள்ளார்ந்த பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக்காக உருவாக்கப்பட்ட நிரல். அந்த நுண்செயலியில் மட்டுமே செயல்படும். உள்ளார்ந்த பயன்பாடு அல்லாத பயன்பாடுகளைவிட அதிவேகமாகச் செயல்படும். அல்லது பயன்பாடுகள் வேறொரு இடைநிலை நிரலின் உதவியுடன்தான் செயல்பட முடியும்.

native code : உள்ளார்ந்த குறிமுறை : ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது செயலிக்காக எழுதப்பட்ட கட்டளைத் தொகுதி.


native compiler : தன்மொழி மாற்றி : உள்ளுர்த் தொகுப்பி; ஒரு குறிப்பிட்ட கணினியில் மட்டும் பயனாகக்கூடிய குறியீட்டை உருவாக்கும் தொகுப்பு.

native data base : உள்ளார்ந்த தரவுத் தளம்.

native file format : உள்ளார்ந்த கோப்பு வடிவம் : ஒரு பயன்பாடு உள்ளார்ந்த நிலையில் தகவலை கையாளப் பயன்படுத்தும் கோப்பு வடிவம். பிற வடிவமைப்புகளில் உள்ள கோப்புகளை உள்ளார்ந்த அமைப்புக்கு மாற்றிய பின்னரே கையாள முடியும். (எ-டு) ஒரு சொல்செயலி மென்பொருள், ஆஸ்கி (ASCII) உரை வடிவில் உள்ள உரைக்கோப்புகளை அடையாளம் காணும். ஆனால் அவற்றை தனக்கேயுரிய சொந்த வடிவமைப்புக்கு மாற்றிய பின்னரே அவற்றைத் திரையில் காட்டும்.

native language : தன் மொழி : ஒரு உற்பத்தியாளரின் எந்திரங்களுக்கு மட்டுமே புரியும் மொழியைக் கொண்ட கணினி.

native mode : உள்ளூர் முறை : ஒரு கணினியின் வழக்கமான ஒட்டும் முறை. அதன் உள்ளே