பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/984

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

983


native user

983

natural language support


அமைந்த நிரல் தொகுதியிலிருந்து நிரலாக்கத் தொடரை இயக்குவது. 386 போன்ற உயர் நிலை கணினி பாதுகாக்கப்பட்ட முறையில் இயங்கும்.

native user : தன்னார்வப் பயனாளர் : கணினியில் ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்படுபவர். ஆனால் அதற்கு நிரல் தொடர் அமைக்கும் பட்டறிவு இல்லாதவர்.

natural : இயற்கையான ; இயல்பான : மென்பொருள் ஏஜி (AG) யிடமிருந்து வரும் நான்காம் தலைமுறை மொழி. பெருமுகக் கணினியிலிருந்து நுண் கணினி வரையிலான பலவகைக்கணினிகளில் இயங்குவது.

natural input-output devices : இயற்கை உட்பாட்டு - வெளிப்பாட்டுச் சாதனங்கள்.

natural language : இயல்மொழி; இயற்கை மொழி : மனிதர்கள் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழி. கணினி நிரலாக்க மொழி மற்றும் எந்திர மொழியிலிருந்து மாறுபட்டது. கணினி அறிவியலில் செயற்கை நுண்ணறிவு என்ற பிரிவில், இயற்கை மொழிகளை கணினி புரிந்து கொள்வது, அதனைக் கணினிச் சூழலுக்கேற்ப பயன்படுத்துவது ஆகியவை பற்றிய ஆய்வுகள் அடங்கும்.

natural language processing : இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம் : கணினி அறிவியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றில் ஒரு ஆய்வுப் புலம். எழுதப்படும் அல்லது பேசப்படும் மனித மொழியை அறிந்து கொள்ளும் மனித மொழிக்கு மறுமொழியிறுக்கும் கணினி அமைப்புகள் பற்றி ஆராயப்படுகின்றன.

natural language query இயற்கை மொழி வினவல் : ஒரு தரவுத் தள முறைமையில் தரவுவைப் பெற இயற்கை மொழிகளின் (ஆங்கிலம், தமிழ் போன்ற) கட்டளைகள் மூலம் உருவாக்கப்பட்ட வினவல். (எ-டு) எண்பதுக்குமேல் மதிப்பெண் பெற்றவர் எத்தனை பேர்? வினவல் கட்டளைத் தொடர் அமைப்பு குறிப்பிட்ட இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் கணினி அதைப் பகுத்து அறிந்து செயலாற்ற முடியும்.

natural language support : இயற்கை மொழி ஆதரவு : மனிதர்களின் குரலை அறிந்து கொள்ளும் கணினி. பயனாளர்