பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/985

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

984


natural language system

984

. navy. mil

குரல் கட்டளைகளை அவரின் சொந்த மொழியிலேயே தரலாம். கணினி அதற்கேற்ப செயலாற்றும்.

natural language system : இயற்கை மொழியாய்வு அமைப்புகள்; இயற்கை மொழியாய்வு முறைமை.

natural number : இயற்கை எண் : சுழி அல்லது அதைவிடக் கூடுதல் மதிப்புள்ள ஒரு முழு எண்.

natural video image : இயற்கையான ஒளிக்காட்சித் தோற்றம் : ஒளிக்காட்சி ஒளிப்படக் கருவி வி. சி. ஆர். அல்லது ஒளிக்காட்சி வட்டு இயக்கி போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்ட உருவம். உண்மையான பருப் பொருளிடமிருந்து பிரதிபலிக்கப்பட்டு தோன்றிய ஒளிக்கதிர்களைக் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணினி உருவாக்கும் உருவங்களிலிருந்து மாறுபட்டது.

NAU : நாவ் : (1) Network Access Unit என்பதன் குறும்பெயர். கணினியை லேனுக்கு ஏற்ற தாகச் செய்யும் இடைமுக அட்டை. (2) Network Addressable Unit என்பதன் குறும்பெயர். பெயர் மற்றும் முகவரியால் குறிக்கக்கூடிய எஸ். என். ஏ. அலகு.

navigation : வழிநடத்தல்; வழி செலுத்தல்; வழி கண்டறிதல்.

navigation bar : வழிநடத்து பட்டை : இணையத்தில் உலா வர அல்லது ஒரு குறிப்பிட்ட வலைத் தளத்தைச் சுற்றி வர மீத்தொடுப்புகளைத் தொகுத்து முகப்புப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டை.

navigation button : வழி செலுத்து பொத்தான்.

navigation keys : வழிநடத்து விசைகள் : திரையில் காட்டியின் (cursor) நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது வழி நடத்தும் விசைகள். விசைப்பலகையில் உள்ள நான்கு அம்புக்குறிகள், பின் இடவெளி (backspace), முடிவு (End), தொடக்கம் (Home), மேல்பக்கம் (Page up), கீழ்ப்பக்கம் (Page Down) ஆகிய விசைகள் இவற்றில் அடங்கும்.

navigator : நேவிக்கேட்டர் : நெட்ஸ்கேப் நிறுவனம் உருவாக்கிய இணைய உலாவி மென்பொருள் (Browser).

navigator for e-mail : மின் அஞ்சல் வழிசெலுத்தி.

. navy. mil : நேவி. மில் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்தது