பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/986

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

985


. nb. ca

985

N-channel MOS

என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

. nb. ca : . என்பி. சி. ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டைச் சேர்ந்த நியூ புருன்ஸ்விக் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NBCD : என்பிசிடி : Natural Binary Coded Decimal என்பதன் குறும்பெயர்.

ΝΒΡ : என்பிபீ : பெயர் பிணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Name Binding Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆப்பிள்டாக் குறும்பரப்புப் பிணையத்தில் பயனாளருக்குத் தெரிந்த கணுக் கணினிகளின் பெயர்களை ஆப்பிள்டாக் முகவரிகளாக மாற்றும் பயன்பாட்டு நெறிமுறை.

NBS : என்பிஎஸ் : National Bureau of Standards என்பதன் குறும்பெயர். கணினி தொழிலுக்கு தர நிர்ணயங்களை உருவாக்கப் பொறுப்பேற்றுள்ள அரசு அமைப்பு.

N/C : என்/சி : National Computer Conferences என்பதன் குறும்பெயர், ஆண்டுதோறும் (அமெரிக்காவில்) நடைபெறும் ஒரு பெரிய கணினி வணிகக் கண்காட்சி.

. nc : . என்சி : ஒர் இணைய தள முகவரி நியூ காலிடோனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NCB : என்சிபி : Network Control Block என்பதன் குறும்பெயர். நெட்பயாஸ் (NetBIOS) போக்குவரத்து விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் பொதி அல்லது பொட்டல அமைவு.

NCC : என்சிசி : தேசிய கணினி மாநாடு எனப் பொருள்படும். 'National Computer Conference' என்பதன் குறும்பெயர். கணினி பயனாளர்கள், கல்வியாளர்கள், மென்பொருள் கருவி உருவாக்குபவர்கள் ஆகியோரைக் கொண்டு ஆண்டுதோறும் நடைபெறும் மாநாடு. அமெரிக்க தரவுச் செயலாக்கச் சங்கங்களின் மாநாடு சார்பில் நடைபெறுகிறது.

NCGA : என்சிஜிஏ : National Computer Graphics Association என்பதன் குறும்பெயர்.

N-channef MOS (NMOS) : என்மாஸ் : எதிர்மறை சக்தி அளிக்கும் மின்னோட்ட முறையினைப் பயன்படுத்தும் மின் சுற்று. PMOS-ஐ விட இரண்டு மடங்கு வேகம் கொண்டது. ஆனால் குறைவான அடர்த்தி கொண்டது.