பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/987

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

986


NCİC

986

. nc. us

NCIC : என்சிஐசி : தேசியக் குற்றத் தகவல் மையம்' எனப் பொருள்படும் 'National Crime Information Centre' என்பதன் குறும்பெயர். அமெரிக்கா முழுவதும் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான தரவுகளைக் கொண்ட அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கணினிமய கட்டமைப்பு. சட்டத்தைப் பராமரிக்கும் அமைப்புகள். அரசின் எல்லா நிலைகளிலும் இதை அணுகலாம்.

NCR : என்சிஆர் : National Cash Register என்பதன் குறும்பெயர். ரொக்கப் பதிவேடுகளை உற்பத்தி செய்ய ஜான் ஹெச். பேட்டர்சன் உருவாக்கிய ஒரு அமெரிக்க நிறுவனம்.

NCR corporation : என்சிஆர் அமைவனம் : கணினிக் கருவியைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் அமைவனம்.

NCR paper : என்சிஆர் காகிதம் : No Carbon Required என்பதன் குறும்பெயர். கார்பன் காகிதத்தைப் பயன்படுத்தாத பல்-பகுதி காகிதம். முந்தைய தாளின் பின்பகுதியில் மை சேர்க்கப்பட்டிருக்கும்.

NCSA : என்சிஎஸ்ஏ : மொசைக்கை உருவாக்கிய National Center for Super computing Applications என்பதன் குறும்பெயர். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் இருப்பது.

NCSA server : என்சிஎஸ்ஏ வழங்கன் : இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்திலுள்ள மீத்திறன் கணிப் பணிப் பயன்பாடுகளுக்கான தேசிய மையம் (National Center for Super Computing Applications) NCSA எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு உருவாக்கிய ஹெச்டீடீபீ வழங்கன் கணினியும் இதுவும், செர்ன் (CERN) ஆய்வுக் கூடத்தில் உருவாக்கிய வழங்கன் கணினியும்தாம் வைய விரிவலைக்காக உலகிலேயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளாகும். பயனாளர்கள் இவற்றிலுள்ள தரவுவை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

NCSA telnet : என்சிஎஸ்ஏ டெல்நெட் : மீத்திறன் கணிப்பணிப் பயன்பாடுகளுக்கான தேசிய மையம் (National Center for Super Computing Applications) உருவாக்கி விநியோகித்த ஒர் இலவச டெல்நெட் கிளையன் மென்பொருள்.

. nc. us : . என். சி. யு. எஸ் : ஒர் இணைய தள முகவரி