பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

988


NECC

988

nematic

உருவாக்கத் துவங்கிய முன்னணி ஜப்பானிய கணினி உற்பத்தி நிறுவனம். முதல் ஐபிஎம் பெருமுகக் கணினியின் அறிமுகத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழிந்த உடனே இந்நிறுவனம் செயல்பட்டது.

NECC : என்இசிசி : தேசியக் கணினி கல்வி மாநாடு' எனும் பொருள்படும் 'National Educational Computing Conference' என்பதன் குறும்பெயர். கல்வியில் கணினிகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள கல்வியாளர்களின் ஆண்டுக் கூட்டம்.

needle, sorting : வரிசைப்படுத்தும் ஊசி; வகைப்படுத்தும் ஊசி.

negate : மறுதலி; எதிர் மறை வினை : NOTஎன்னும் அளவை இயக்கி செயல்படுதல்.

negation : எதிர்நிலை : இரு நிலைகளில் நிலவும் (இரும) சமிக்கை (signal) அல்லது துண்மி தோரணியை (bit pattern) அதற்கு எதிர்நிலையாக மாற்றியமைத்தல். (எ-டு) 1001 என்னும் துண்மிகளை 0110 என மாற்றியமைத்தல்.

negative entry : குறையெண்/ எதிரெண் உள்ளீடு : ஒரு கணிப் பானில் உள்ளீடு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறை (Negative) அடையாளமிட்டு அவ்வெண் மதிப்பை குறையெண் மதிப்பாக மாற்றியமைத்தல்.

negative number : எதிர்மறை எண்.

negative true logic : எதிர்மறை உண்மை அளவை : அதிக மின் சக்தியானது '0' வையும் குறைந்த மின் சக்தி 1 ஐயும் குறிப்பிடும் அளவை அமைவு.

negative value : மறிநிலை மதிப்பளவு.

negotiation : பேரம்; ஒப்பந்தப் பேச்சு : ஒருவருக்கொருவர் நிறைவு தரும் ஒப்பந்த உறவை ஏற்றுக் கொள்ளும் முயற்சியில் சேவைகள் மற்றும் கடமைகளை பரிமாறிக்கொள்ளும் கலை.

NELIAC : நெலியாக் ; Naval Electronics Laboratory International Algorithmic Compiler என்பதன் குறும்பெயர். அறிவியல் மற்றும் நிகழ்நேர கட்டுப்பாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க அதிகம் பயன்படும் உயர்நிலை நிரல் தொடர் மொழி.

nematic : நெமாட்டிக் : நூல் போன்ற அமைப்புடைய படிக நிலைக்கு முந்தைய, நீர்மை நிலைக்குப் பிந்தைய ஒரு பொருளின் நிலை. சான்றாக, திரவப் படிகம்.