பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/990

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

989


neper 989 nesting neper : நேப்பர் : நேப்பியரின் மடக்கை எண் அடிப்படையிலான ஒரு அளவை அலகு. இரண்டு மதிப்புகளுக்கு இடையிலான விகிதத்தை அது குறிப்பிடுகிறது.

nerd : ஆர்வலர்.

nest உள்ளமை; வலை;வலைப்பின்னல்; ஒன்றுக்குள் ஒன்று : ஒரு கட்டமைப்புக்குள் அதேபோன்ற கட்டமைப்பை இடம்பெறச் செய்தல். (எ-டு) : 1. ஒரு தரவுத் தளத்தில் உள்ள அட்டவணைக்குள் வேறோர் அட்டவணை இருக்கலாம். 2. ஒரு நிரலில் உள்ள செயல் முறைக்குள் இன்னொரு செயல் முறை வரையறுக்கப்படலாம். 3. ஒரு தரவுக் கட்டமைப்பில் (data structure), ஒர் ஏட்டிலுள்ள (record) ஒரு புலம் (field) இன்னோர் ஏடாக இருக்கலாம்.

nested block : பின்னிய கட்டம் ; உள்ளமைத் தொகுப்பு : ஒரு நிரல் தொடர் கட்டத்தின் உள்ளே அமைக்கப்படும் மற்றொரு நிரல் தொடர் கட்டம்.

nested loop : கூட்டுக் கொக்கி வளையம்; பின்னிய வளையம்; உள்ளமை வளையம் : வேறொரு வளையத்தின் உள்ளே அமைந்துள்ள வளையம்.

nested programme : உள்ளமை நிரல் தொடர்; பின்னல் நிரல் தொடர் ; வேறொரு பெரிய நிரல் தொடரின் ஒரு பகுதியாக உள்ள ஒரு நிரல் தொடர்.

nested subroutine : பின்னல் துணை வாலாயம் : உள்ளமைத் துணைச் சுற்று; பின்னிய துணை வழமை : ஒரு துணைச் சுற்றின் உள்ளே வேறொரு துணைச்சுற்றின் அழைப்புச் சொற்றொடர் மூலம் பெறக் கூடிய துணைச் சுற்று. பேசிக் மொழியில் உள்ள GOSUB இத்தகைய ஒன்று.

nested transaction : வலைப் பின்னல் பரிமாற்றம் : ஒரு நிரலில், ஒரு பரந்த பரிமாற்றச் செயல்பாட்டினுள் வேறொரு செயல்பாடு அல்லது செயல் பாடுகளின் வரிசை இடம் பெறலாம். புறத்தே இயங்கும் பெரிய பரிமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வராமலே உள்ள இயங்கும் சிறிய பரிமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

nesting : ஒன்றுள் ஒன்று; உள்ளமைவு : வேறொரு நிரல் தொடர் பிரிவுகள் அல்லது தரவு கட்டங்களுக்குள் நிரல் தொடர் பிரிவுகள் அல்லது தரவு கட்டங்களை அமைத்தல். அல்ஜிப்ரா முறை பின்னலில் தொகுக்கும் விளக்கத்தை அடைப்புக் குறிகளுக்குள் பின்வருமாறு குறிப்பிடலாம் (W*X* (A-B) ).