பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/991

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

990


nesting loop 990

netBSD

nesting loop : ஒன்றுள் ஒன்றான மடக்கி

. net : . நெட் : 1. இணையக் களப்பெயர் அமைப்பில் மேல்நிலை களத்தைக் குறிக்கும் சொல். இணையச் சேவையாளர் என்பதை அடையாளங்காட்டும் நெட் என்பது முகவரியின் இறுதியில் இடம் பெறும். 2. மைக்ரோசாஃப்ட் அறிமுகப் படுத்தியுள்ள புதிய தொழில் நுட்பம். மொழிசாரா பணித் தளத்தை (Language Independent Platform) வழங்கும் ஒரு தொழில்நுட்பம். விசுவல் பேசிக்/விசுவல் சி++, சி#, விபிஸ் கிரிப்ட், ஜேஸ் கிரிப்ட் போன்ற மொழிகளில் எழுதப்படும் நிரல்களை மொழி மாற்றம் செய்து இடைநிலை மொழி நிரலாக மாற்றியமைத்து பொது மொழி இயக்கச் சூழலில் (Common Language Runtime-CLR) இயக்க முடியும்.

net1 : வலை : இணையம் : இணையத்தில் மக்களையும், நிறுவனங்களையும் குறிக்கப் பயன்படும் முன்னொட்டு (Prefix) (எ-டு) : இணையச் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபரை இணையக் கடவுள் (net. god) என அழைப்பர்.

net2 : நெட் வலை : 1. இணையம் (Internet) என்பதன் சுருக்கம். 2. யூஸ்நெட் (Usenet) டின் சுருக்கம்.

net address : வலை முகவரி ; இணைய முகவரி : வைய விரி வலை (World Wide Web) -யின் முகவரி. இதனை யூஆர்எல் என்றும் அழைப்பர். உலகளாவிய வள இடங்காட்டி. (Universal Resource Locator) என்பதன் சுருக்கம். தனித்த (Unique) அல்லது சீரான (Uniform) வள இடங்காட்டி என்று கூறுவாரும் உண்டு.

NetBEUI : நெட்பிஇயுஜ : நெட் பயாஸ் மேம்பட்ட பயனாளர் இடைமுகம் (Net BIOS Enhanced User Interface) என்பதன் சுருக்கம். பிணைய இயக்க முறைமைகளுக்கான மேம்படுத்தப்பட்ட நெட் பயாஸ் நெறிமுறை. லேன் மானேஜர் (Lan Manager) வழங்கன் கணினிகளுக்காக ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இப்போது வேறு பல பிணையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

netBSD நெட்பிஎஸ்டி தன்னார்வ முயற்சியினால் உருவாக்கப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் இயக்க முறைமையின் இலவசப் பதிப்பு. நெட்பிஎஸ்டி பல்வேறு வன்பொருள் பணித்தளங்களில் செயல்படக்கூடியது. போஸிக்ஸ் (POSIX) தர வரையறைக்கு ஒத்திசைவானது.