பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/992

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

991


net. god

991

NetPC

net. god : இணையக் கடவுள் : இணையச் சமூகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மரியாதைக்குரிய நபர்.

nethead : வலைக் கிறுக்கன்; இணையப் பைத்தியம் : 1. இணையத்துக்கு அடிமையானவர்போல எந்நேரமும் இணையத்திலேயே மூழ்கிக்கிடப்பவர். 2. rec. music. gdead செய்திக் குழுவில் அல்லது அது போன்ற அமைப்பில் கலந்து கொள்ளும் சுவைஞர்.

net history : வலை வரலாறு.

netiquette : வலைப் பண்பாடு ; இணைய நாகரிகம் : பிணைய நாகரிகம் என்று பொருள்படும் Network Etiquette என்பதன் சுருக்கச் சொல். மின்னஞ்சல் மற்றும் யூஸ்நெட் (செய்திக் குழுக்கள்) கட்டுரைகள் போன்ற மின்னணுச் செய்திகளை அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நெறிகள் பற்றிய கோட்பாடுகள். இணைய நாகரிகத்துக்கு ஒவ்வாத செயல்பாடுகள் சில. சர்ச்சைக்குரிய கருத்துகள் - மன உணர்வுகளைப் புண்படுத்தும் செய்திகள் - தனிப்பட்ட முறையில் சாடுதல் - தொடர்பில்லாத ஏராளமான குப்பைச் செய்திகளை அனுப்பி வைத்தல் - ஒரு திரைப்படம், தொலைக்காட்சிப் படம், புதினம் போன்றவற்றின் கதைமுடிவை முன்பே அறிவித்துவிடல் தீங்கு விளைவிக்கும் செய்திகளை மறையாக்கம் செய்யாமல் வெளியிடல் - தொடர்பில்லாத அஞ்சல் குழுவுக்கு தொடர்பில்லாத செய்திகளை அனுப்புதல்.

netizen : வலைவாசி; இணையக் குடிமகன் : இணையத்தில் அல்லது பிற பிணைய அமைப்புகளில் நிகழ்நிலைத் தரவுத் தொடர்புகளில் பங்கு பெறும் ஒருவர். குறிப்பாக இணையக் கலந்துரையாடல், அரட்டை போன்றவற்றில் பங்கு பெறுபவர்.

Net Meeting : நெட் மீட்டிங் : இணையக் கலந்துரையாடலுக்கான மைக்ரோசாஃப்டின் மென்பொருள்.

net news : நெட் நியூஸ் : ஒரு இணைய நிரல்.

NetPC : வலைப்பீசி; இணையக் கணினி : 1996ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் உருவாக்கிய ஒரு கணினிப் பணித்தள வரன்முறை. குறிப்பாக விண்டோஸ் என்டி வழங்கன் அடிப்படையிலான பயன்பாட்டு நிரல்களை இயக்கும்