பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/993

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

992


net personality 992 Netscape Navigator

கணினிகளுக்கானது. கிளையன் கணினிகளில் இயங்கும் பயன்பாடுகளைக் குறிக்காது.

net personality : வலைநபர் ; இணையத் திலகம்; இணையத் தளபதி : இணையத்தில் ஒரளவு செல்வாக்குப் பெற்ற நபரைக் குறிக்க வழங்கும் பேச்சு வழக்குச் சொல்.

net police : வலைக் காவலர் : இணையத்தில் நடைபெறும் தரவு பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த தம்மைத் தாமே காவலர்களாய் நியமித்துக் கொண்டு தாங்கள் சரியென நினைக்கும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முயல்பவர்கள். இணையப் பண்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக இவர்களின் நடவடிக்கைகள் அமையும். மின்னஞ்சல் வழியாக விருப்பத்துக்கு எதிரான விளம்பரங்களை அனுப்புபவர்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. செய்திக் குழுக்கள் அல்லது அஞ்சல் பட்டியல்களில் தவறான அரசியல் கருத்துரைகளை வெளியிடுபவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்.

netroom : பின்னலமைப்பகம்; இணையப்பகுதி : ஹெலிக்ஸ் மென்பொருள் நிறுவனம்உருவாக்கிய டாஸ் நினைவக மேலாளர். பெரிய கட்டமைப்பு இயக்கிகளை டாஸ் நினைவகத்தில் சுருக்குவதற்கு இது பயன்படுகிறது. அதனுடைய 'டிஸ்கவர்' பயன்பாடானது கணினி அமைப்பில் அப்போது உள்ள உறுப்புகளைப்பற்றி அறிவிக்கும்.

netscape : நெட்ஸ்கேப் : ஜிம் கிளார்க் மற்றும் மார்க் ஆண்டர் சென் உருவாக்கிய ஒரு நிறுவனம். வணிகச் சந்தைக்காக பணியகங்களையும், மேலோடி (Browser) களையும் இந்நிறுவனம் உருவாக்கியது. அவற்றில் ஒன்றுதான் இப்போது மிகவும் புகழ்பெற்று விளங்கும் இணைய மேலோடியான "நெட்ஸ்கேப் நேவி கேட்டர்" - இதைப் பரவலாக 'நெட்ஸ்கேப்' என்றே அழைப்பர்.

Netscape Communicator : நெட்ஸ் கேப் கம்யூனிகேட்டர் : இணைய உலாவி, மின்னஞ்சல், வலைப்பக்கம் உருவாக்கி போன்ற பயன்பாடுகள் அடங்கிய கூட்டுத் தொகுப்பு. நெட்ஸ் கேப் நிறுவனத் தயாரிப்பு.

Netscape Navigator : நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் : நெட்ஸ்கேப் நிறுவனம் வெளியிடும் இணைய உலாவி மென்