பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

netspeak

993

netware


பொருள். இணையப் பயனாளர்கள் பலரும் விரும்பிப் பயன்படுத்துவது. விண்டோஸ் 3. 1, விண்டோஸ் 95, விண்டோஸ் என்டி, விண்டோஸ் 2000, மெக்கின்டோஷ் மற்றும் யூனிக்ஸின் பல்வேறு வகை இயக்க முறை மைகளுக்குமான தனித்தனி நேவிக்கேட்டர் பதிப்புகள் உள்ள்ன. என்சிஎஸ்ஏ நிறுவனத் தின் மொசைக் இணைய உலாவிதான் வைய விரிவலைக்கான முதல் உலாவி. மொசைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர். இப்போது நெட்ஸ்கேப் கம்யூனிக்கேட்டரின் ஓர் அங்கமாக வெளியிடப்படுகிறது.

netspeak : நெட்ஸ்பீக்; வலைப்பேச்சு : மின்னஞ்சல், இணைய அரட்டை, செய்திக் குழுக்கள் ஆகியவற்றில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய மரபுகளின் தொகுதி. பெரும்பாலும் தலைப்பெழுத்துக் குறும்பெயர்களாக இருக்கும். (எ-டு). IMHO, ROFL. நெட்ஸ்பீக்கை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இணையப் பண்பாடு நிர்ணயிக்கிறது.

net telephone : வலைத் தொலைபேசி.

net-top box : வலைப்பெட்டி; இணையப் பெட்டி வலைக்கணினி : குறைந்த அளவு வன்பொருள் பாகங்கள் கொண்ட ஒருவகை சொந்தக் கணினி. இணையத்தில் கிடைக்கும் மின்னஞ்சல், வலை உலா மற்றும் டெல்நெட் இணைப்பு போன்ற பல்வேறு சேவைகளை குறைந்த செலவில் நுகர்வதற்கென உருவாக்கப்பட்ட கணினி. இக்கணினிகளில் நிலைவட்டு இருக்காது. நிறுவப்பட்ட நிரல்கள் எதுவும் கிடையாது. ஆனால் தேவையான தரவுகளை, மென்பொருள் பயன்பாடுகளை இக்கணினி இணைக்கப்பட்டுள்ள பிணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

netview : நெட்வியூ : எஸ்என்ஏ மற்றும் பிற எஸ்என்ஏ அல்லாத, ஐ. பி. எம் அல்லாத சாதனங்களுக்கான மைய முகவு மற்றும் கட்டுப்பாட்டினை வழங்கும் ஐ. பி. எம் எஸ்என்ஏ மேலாண்மை மென் பொருள். நெட் வியூவை டோக்கன் ரிங் லேன்கள், ரோம் சி. பி. எக்ஸ்கள் மற்றும் ஐ. பி. எம். அல்லாத மோடெம்களுடன் நெட்வியூ/பீசியை இணைப்பதுடன் புரவலரிடம் கட்டுப்பாட்டையும் பராமரித்து வருகிறது.

netware : நெட்வேர் : நெட்வேர் இயக்க அமைப்பின் பயனாளர் குழு.




63