பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/996

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

995


networkd client

995

network data structure

network client : பிணையக் கிளையன்.

network computer : பிணையக் கணினி : பிணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான வன்பொருள், மென்பொருள்களைக் கொண்ட ஒரு கணினி.

network control programme : பிணையக் கட்டுப்பாட்டு நிரல் : பெருமுகக் கணினி அடிப்படையிலான ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தில் பொதுவாக தகவல் தொடர்பு கட்டுப்படுத்தியில் தங்கியிருக்கும் நிரல். தகவல் தொடர்புப் பணிகளை இது நிறைவேற்றி வைக்கிறது. தகவல்களை திசைவித்தல், பிழைக்கட்டுப்பாடு, தடக்கட்டுப்பாடு, முனையங்களை அவை தகவல் அனுப்புகின்றனவா எனச் சோதித்தல் இவை போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இதன் காரணமாய் தலைமைக் கணினி பிற செயல்பாடு களில் கவனம் செலுத்த முடிகிறது.

network database : பிணையத் தரவுத் தளம் : 1. ஒரு பிணையத்தில் செயல்படும் தரவுத் தளம். 2. ஒரு பிணையத்தின் பிற பயனாளர்களின் முகவரிகளைக் கொண்டுள்ள தரவுத்தளம். 3. தரவு மேலாண்மையில் தரவு ஏடுகள் ஒன்றோடொன்று ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தொடர்பு கொண்டுள்ள ஒரு வகைத் தரவுத் தளம். பிணையத் தரவுத் தளம் படிநிலைத் தரவுத் தளம் போன்றது. ஒர் ஏட்டுக்கும் இன்னோர் ஏட்டுக்கும் தொடர்ச்சியான உறவுமுறை இருக்கும். சிறிய வேறுபாடும் உண்டு. கடுமையான கட்டமைப்பு இல்லாதது. எந்தவொரு ஒற்றை ஏடும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடுகளைச் சுட்ட முடியும். இரண்டு ஏடுகளுக்கிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் இருக்க முடியும். ஆனால் படிநிலைத் தரவுத் தளத்தில் இரு ஏடுகளுக்கு இடையே ஒரேயொரு பாதைதான். பெற்றோர் ஏட்டிலிருந்து குழந்தை ஏட்டுக்குப் பாதை உண்டு.

network database management system (NDBMS) : பிணைய தரவுத் தள மேலாண்மை அமைப்பு : தொடர்புள்ள நிரல் தொடர்களைத் தொகுத்து தரவுத் தளத்தில் ஏற்றி, அணுகி, கட்டுப்படுத்தல். தரவுப் பதிவேடுகளை குறியீடுகள் உள்ள கூட்டு அமைப்பில் பிணைத்து அடிக்கடி புதுப்பிக்கப்படும்.

network data structure : பிணையத் தரவு அமைப்பு : தரவுகளை அமைக்கும் ஒரு அளவை அணுகுமுறை. திசை