பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

997


network interface card

997

network neighbourhood

2. பிணையங்களை வடிவமைத்தல்.

network interface card : பிணைய இடைமுக அட்டை

network laser printer : பிணைய லேசர் அச்சுப்பொறி; பிணைய ஒளியச்சுப்பொறி.

network latency : பிணைய நேரம் : ஒரு பிணையத்தில் இரண்டு கணினிகளுக்கிடையே தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்.

network layer : பிணைய அடுக்கு : ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்றாவது அடுக்கு. கணினிகளுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை வரையறுக்கிறது. தரவுத் தொடுப்பு (Data link) அடுக்குக்கு மேல் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குத் தரவு சென்றடைவதை உறுதி செய்கிறது. ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்கு தரவு இடம் பெயர்வதை ஒழுங்குபடுத்தும் மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம், போக்குவரத்து) நடுவில் உள்ளது.

network model : பிணைய மாதிரியம் : தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணையமாதிரியம் (2) படி நிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரியம், ஏறத்தாழ படிநிலை மாதிரியம்போன்றது. ஒரேயொரு முக்கிய வேறுபாடு உண்டு. பிணைய மாதிரியத்தில் ஒர் ஏடு ஒன்றுக்கு மேற்பட்ட சேய் ஏடுகளைக் கொண்டிருக்க முடியும். பிணைய மாதிரிய அடிப்படையிலான ஒரு தரவுத் தள மேலாண்மை அமைப்பினை படிநிலை மாதிரியத்தைபோல மாற்றியமைக்க முடியும்.

network modem : பிணைய இணக்கி : ஒரு பிணையத்தில் பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் இணக்கி. (எ-டு) ஒரு நிகழ் நிலைச் சேவையாளரை, ஒர் இணையச் சேவையாளரை, ஒரு சேவை அமைப்பை அல்லது பிற நிகழ்நிலை வளங்களை அணுக பயனாளர்கள் தொலை பேசிமூலம் அணுகும்போது இந்தப் பிணைய இணக்கிப் பயன்படுகிறது.

network neighbourhood : நெட்வொர்க் நெய்பர்குட் : பிணையச் சுற்றம் : விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் முகப்புத் திரையில் இடம்பெற்றுள்ள சின்னம்.