பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

collection,data

98

colour named literals


தளங்களின் பட்டியலை வடிகட்டும் முறையில் உருவாக்க முடியும். அங்காடி ஆராய்ச்சிக்கான கருவியாக இணைந்து வடிகட்டுதலைப் பயன்படுத்துகிறார்கள். உற்பத்திப் பொருள்கள் பற்றிய கருத்துகள், மதிப்பீடுகள் ஆகியவை கொண்ட தரவுத் தளம் ஏற்படுத்தி, தரவுத் தளத்திலுள்ள கருத்துகளை வைத்து எந்தப் புது உற்பத்திப் பொருளை மக்கள் விரும்பி வாங்குவார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் முன் கூட்டிக் கூற இயலும்.

collection, data : தகவல் சேகரிப்பு : தரவுத் திட்டம்.

collector : சேகரிப்பி; திரட்டி.

colour : வண்ணம்; நிறம் : அலை வரிசை பொறுத்து மனிதர் கட்புலனால் காணத்தக்க ஒளியின் ஒரு பண்பு நிறம் என இயற்பியல் குறிப்பிடுகிறது. உயர் அலைவரிசை உடைய வயலெட் நிறத்திலிருந்து குறை அலைவரிசை உடைய சிவப்பு நிறம்வரை நிறங்கள் உண்டு. மின் காந்த நிறமாலை முழுமையின் ஒரு சிறு பகுதியாகக் காணக்கூடிய ஒளிப்பட்டையில் அந்த நிறங்களைக் காணலாம். கணினி ஒளிக்காட்சித்தில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து செயல்பட்டு நிறம் உண்டாக்கப்படுகிறது. தனித்தனி நிறங்களுக்குரிய துண்மிகளை இணைக்கும் வேலையை மென்பொருள் செய்கிறது. அந்தத் துண்மிகளுக்குத் திரையில் குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. படக்கூறுகள் எனப்படும் தனித்தனிப் புள்ளிகள் அல்லது குறியீட்டு எண் குறிப்பிட்ட இடமாகும். வன்பொருளிலுள்ள தகவமைப்பு ஏற்பாடு இந்தத் துண்மிகளை மின்குறியீடுகளாக மாற்றுகிறது. எதிர் மின்வாய்க் கதிர்க் குழல் காட்சித் திரையில் நேரிணைவான இடங்களில் உள்ள வெவ்வேறு நிறமுடைய எரியங்களின் பிரகாச அளவை அந்தக் குறியீடுகள் கட்டுப்பாடு செய்கின்றன. பயனாளரின் கண்கள் எரியங்கள் (Phosphors) கொடுக்கும் ஒளிகளை இணைத்து ஒர் ஒற்றை நிறமாகக் காண்கின்றன.

colour balancing : வண்ண சம நிலைப்படுத்துதல்; நிறச் சமனாக்கம்.

colour burst : நிற வெடிப்பு : வண்ணத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்காக ஆரம்பத்தில் உண்டாக்கப்பட்ட தொழில் நுட்பம். ஒளிக் காட்சி சமிக்கையில் நிறத்தைக் குறியீட்டு வடிவில் மாற்ற உதவும் தொழில் நுட்பமாக இப்போது உள்ளது.

colour contrast : வண்ண மாறுபாடு; நிற வேறுபாடு.

colour enrichment : நிறச் செறிவு.

colourimeter : வண்ணமதிப்பீட்டுச் சாதனம் : தரமான தொகுப்பு வண்ணங்களைக் குறிப்பிடும் முறையில் வண்ணங்களை மதிப்பிட்டு அடையாளம் காண உதவும் சாதனம்.

colour graphics adapter : நிற வரைகலைத் தகவி.

colour inkjet printer : வண்ண மையச்சுப் பொறி.

colour laser printer : வண்ண லேசர் அச்சுப் பொறி.

colour mode property : நிறப்பாங்குப் பண்பு.

colour named literals : நிறப்பெயர் நிலையுரு; நிறப்பெயர் மதிப்புருக்கள்.