பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colour look-up table

99

colour scanner


colour look-up table : நிற நோக்கு அட்டவணை : கணினியின் ஒளிக் காட்சி தகவியில் சேமித்து வைக்கப் பட்டுள்ள அட்டவணை. கணினியின் காட்சித்திரையில் காட்டக்கூடிய வெவ்வேறு வண்ணங்களுக்கு நேரிணையான நிறக்குறியீட்டு நிலை எண்களைக் கொண்டது அப் பட்டியல், மறைமுகமாக வண்ணம் காட்டப்படும்போது, நிறத் துண்மிகள் ஒரு சிறிதளவு ஒவ்வொரு படக்கூறுக்காக சேமித்து வைக்கப்பட்டு, நிறத்திற்காகப் பார்க்கவேண்டிய பட்டியலிலிருந்து குறியீட்டு நிலை எண்களின் ஒரு தொகுதியைத் தெரிந் தெடுப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

colour management : நிற மேலாண்மை : அச்சுத்துறை யில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒருசீரான வண்ணம் உண்டாக்கும் முறை, நுண்ணாய்வுக் கருவி, ஒளிப்படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித் திரை எதிலுமிருந்து ஆர்ஜிபி உள்ளீட்டினைத் துல்லியமாக அச்சிடு கருவி, அச்சிடு கருவிக்கான அளவுக் கோட்டுச் சாதனம் அல்லது உருவம் திரும்பவும் கொணருவதற்கான வெளிப்பாட்டு சாதனம் ஆகிய வற்றுக்காக சிஎம்ஒய்கே வெளிப் பாட்டுக்கு மாற்றுதலும் நிற மேலாண்மை என்பதில் உள்ளடங் கும். ஈரப்பதம் காற்றழுத்தமானி காட்டும் அழுத்தம் போன்ற சூழல் மாறுபாடு களுக்கேற்ப செயற் படுவதும் உள்ளடங்கும்.

colour management system : நிற மேலாண்மை முறைமை : கோடாக் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். மற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் அதைப் பயன் படுத்த உரிமங்கள் வழங்கப்பட்டன. ஒளிக்காட்சித் திரை, கணினிக் காட்சித் திரை, மற்றும் அச்சு வடி வில் எதிலும் தோன்றும் வண்ணங் களுக்கு இணையானவற்றை உண் டாக்கம் அளவீடு செய்யவும் பயன் படுவதற்கான தொழில் நுட்பமாகும்.

colour scanner : நிற வருடு பொறி : உருவங்களை இலக்கமாக்கிய உரு வமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக் கூடியது. வருடு பொறியின் துண்மி (bit)யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். துண்மியின் ஆழம் என்பது வண்ண த்தை 8, 16, 24 அல்லது 32 நுண்மிகளாக மாற்றும் ஆற்றலாகும். வெளிப்பாட்டை அச்சிட வேண்டுமானால் சாதாரண மாக உயர்வகை வண்ண வருடு பொறிகள் பயன்படுத்தப்படு கின்றன. அக்கருவிகள் தகவல்களை