பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colour missing

100

command and control system


உயர் தெளிவுத்திறனுடன் குறியீடாக் கவோ அங்குல வாரிப் புள்ளிக் குறி களாகவோ ஆக்கக் கூடியவை. கீழ் மட்ட வண்ண வருடு பொறிகள் 72 அங்குல வாரிப் புள்ளிகள் கொண்ட தெளிவுத்திறனுடன் குறிகளாக்கு கின்றன. அச்சு செய்யக் கருதப்படாத கணினித் திரை உருவங்களை உண்டாக்க சாதாரணமாகப் பயன் படுத்தப்படுகின்றன.

colour missing : வண்ண இழப்பு; நிறம் காணப்படாமை.

column break : நெடு வரிசை நிறுத்தம்; நெடுக்கை முறிவு.

column count : நெடுக்கை எண்ணிக்கை.

column graph: நெடுக்கை வரை படம்.

column indicator : நெடுக்கை சுட்டிக் காட்டி. .

coiumbus.oh.us : கொலம்பஸ். ஓஹெச்.யுஎஸ். : இணையத்தில் ஒரு முகவரி அமெரிக்க நாட்டு ஒஹீயோ மாநிலத்துக் கொலம்பஸ்ஸில் உள்ள தென்பதைக் குறிப்பிடும் பெரும் புவிபிரிவுக் களப் பெயர்.

colemn chart : நெடுக்கை நிரல்படம் : மதிப்பளவுகள் செங்குத்தான பட் டை.களாக அச்சிடப்பட்டு வெளி யிடப்படும் பட்டை வரைபடம்.

column head : நெடுக்கைத் தலைப்பு.

column text chart : நெடுக்கை உரை நிரல்படம்.

columnar : நெடுக்கையாக.

column width : நெடுக்கை அகலம்.

.com : .காம் : 1. வணிக அமை வனங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவரிகளை அடையாளம் காண உதவும் உயர்மட்டப் பகுதி. இணையத்தின் களப்பெயர் அமைப் பில் பெரும் பிரிவுக் களப் பெயர். காம் என்பது முகவரியின் இறுதிப் பாகத்தில் சேர்க்கப்படுவது, டிஎன்எஸ் (பொருள் வரையறை) பிரதேசம் (பொருள் வரையறை ) ஆகியவற்றையும் பார்க்க. (எ.டு). .கவ், மில், நெட், ஆர்க் இவற்று டன் ஒப்பிட்டுப் பார்க்கவும். 2. எம் எஸ் - பாஸ்ஸில் கோப்பின் வகைப் பெயர் கட்டளைக் கோப்பை அடையாளம் காட்டுவது.

combination chart : சேர்க்கை நிரல் படம்.

combined head : சேர்வுத் தலைப்பு; ஒன்றிணைந்த தலைப்பு.

combining characters : கூட்டு எழுத்துகள்.

combo box : சேர்க்கைப் பெட்டி.

combo box control : சேர்க்கைப் பெட்டி இயக்குவிசை.

command based : கட்டளை அடிப்படையிலான.

command buffer : கட்டளை இடை யகம் : பயனாளர் பதிந்துள்ள கட்ட ளைகள் வைத்திருக்கும் நினைவகத் திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளை களை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்த வும், சிலவற்றை மாற்றவும், கட்டளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின்ப ட்டியலைப் பெறவும் உதவும்.

command and control system : கட்டளை, கட்டுப்பாட்டு முறைமை.