பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

communications software

405

compact disc-recordable


எடுத்துக் கொள்ளும் காலத்தினால் ஏற்படும் தாமதம்). இரண்டாவது தகவல் பாதுகாப்பு.

communications software : தகவல் தொடர்பு மென்பொருள் : பயனாள ரின் கட்டளைகளுக்கு ஏற்ப இணக் கியை (modem) கட்டுப்படுத்தும் மென்பொருள். பெரும்பாலும் இது போன்ற மென்பொருள் முனையக் கணினிகளை குறிப்பிட்ட வகையில் தகவமைத்தல், கோப்புகளைப் பரி மாறிக்கொள்ளல் போன்ற வசதி களைக் கொண்டிருப்பதுண்டு.

communication standard : தகவல் தொடர்புத் தரம்; செய்தித் தொடர்பு செந்தரம்; செய்தித் தொடர்பு திட்ட அளவு.

communications terminal protocol : தகவல் தொடர்பு முனைய நெறி முறை : ஒரு பயனாளர் தன்னுடைய கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கணினியை, அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு கணினியைப் போலவே அணுக வழி செய்யும் முனைய நெறிமுறை இது.

Community Antenna Televisions (CATV) : சமுதாய அலைவங்கித் தொலைக்காட்சி

compatability : ஒத்தியல்பு.

compact : குறு; குறுக்கி; கச்சிதம்.

compact database : தகவல் தளத்தை இறுக்கு.

compact disc : குறுவட்டு : 1. தொடக்க காலங்களில், கேட்பொலி (audio) தகவலை இலக்கமுறை (digital) வடிவில் பதிந்து வைப்பதற் கான ஒரு ஒளியியல் சேமிப்பு ஊடக மாக அறிமுகம் ஆனது. இது மின் காந்த வட்டுகளிலிருந்து வேறு பட்டது. பளபளப்பான உலோகப் பூச்சும் பாதுகாப்பான பிளாஸ்டிக் மேல் பூச்சும் கொண்டது. 74 நிமிடங் கள் கேட்கக் கூடிய உயர்தர ஒலித் தகவலைப் பதிய முடியும். மிகு அடர்த்தியுள்ள லேசர் கதிர் மற்றும் பிரதிபலிப்பு ஆடிகளின் உதவியுடன் இதிலுள்ள தகவல் படிக்கப்படு கிறது. சுருக்கப் பெயர் சிடி (CD). சில வேளைகளில் ஒளிவட்டு என்று அழைக்கப்படுவதுண்டு. 2, சிடிரோம், சிடி-ரோம்/எக்ஸ்ஏ , சிடி -ஆர், சிடி-ஆர்டபிள்யூ, ஃபோட்டோசிடி, டிவிற என்று பல பெயர்களில், பல் வேறு வகையான தகவல் வடிவங்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டுகள் கிடைக்கின்றன. பல் வேறு படிப்பு/ எழுது வேகங்களில் மற்றும் கொள்ள ளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.

compact disc player : குறுவட்டு இயக்கி : குறுவட்டில் பதியப்பட் டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக் கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரி யான வகையில் வெளியீடு செய்வதற் குரிய மின்னணுச் சுற்றுகளையும் இச்சாதனம் கொண்டிருக்கும்.

compact disc interactive (CDI) : இடைப்பரிமாற்ற குறுவட்டு; ஊடாட்டம் குறுவட்டு.

compact disc-recordable and erasable : குறுவட்டு - பதிதகு மற்றும் அழிதகு : பதிதகு குறுவட்டுகள் வெற்று வட்டுகளாகத் தயாரிக்கப்படு கின்றன. அதாவது தொடக்கத்தில் அவற்றில் தகவல் எதுவும் பதியப் பட்டிருக்காது. இத்தகைய வெற்று வட்டுகளை வாங்கி அவற்றில் எழுது வதற்கென உரிய சாதனங்கள் மூலம் தகவலைப் பதியலாம். அவ்வாறு