பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compact model

106

compile time binding


ஒருமுறை பதியப்பட்ட தகவலை மீண்டும் அழித்து எழுத முடியாது. அழிதகு குறுவட்டுகளில் ஒருமுறை எழுதப்பட்ட தகவலை அழித்து விட்டு மீண்டும் புதிய தகவலை எழுத முடியும்.

compact model : கச்சித மாதிரியம் ; இன்டெல் 80x86 செயலிக் குடும் பத்தில் பின்பற்றப்படும் ஒரு நினை வக மாதிரியம். இதில் நிரலாணைத் தொடர்களுக்கென 64 கேபி நினைவகம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் நிரலின் தகவல்களுக்கென 1 எம்பி வரை ஒதுக்கப்படுகிறது.

company sites : நிறுவனத் தளங்கள்.

comparative grammer knowledge : ஒப்பிலக்கண அறிவு

comparison operators : ஒப்பீட்டுச் செயற்குறிகள்

comparison tests : ஒப்பீட்டுச் சோதனைகள்

comparative knowledge : ஒப்புமை அறிவு

compatibility mode : ஒத்தியல்புப் பங்கு : ஒரு கணினி முறைமைக்காக உருவாக்கிய மென்பொருளோ வன் பொருளோ இன்னொரு கணினி முறைமையிலிருந்து செயல்படும் தன்மை. பொதுவாக இம்முறை, இன்டெல் நுண்செயலிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்நிலை இயக்க முறைமைகளில் (ஓ எஸ்/2 மற்றும் விண்டோஸ் என்டி) எம்எஸ் -டாஸ் மென்பொருளை இயக்குதலைக் குறிக்கும். அல்லது சில யூனிக்ஸ் பணிநிலையங்கள் மற்றும் சில மெக்கின்டோஷ் கணினிகளில் எம் எஸ் - டாஸ் மென்பொருள் இயக்குவதைக் குறிப்பதுண்டு.

compilation software : தொகுப்பு: மென்பொருள்; மொழிமாற்றி மென் பொருள்,

compilation time : தொகுப்பு நேரம்; மொழிமாற்று நேரம்.

compiled basic : மொழிமாற்று பேசிக்: பொதுவாக பேசிக் மொழி ஒவ் வொரு ஆணையாக நிறைவேற்றக் கூடிய ஆணைமாற்றி (interpreter) யை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறில்லாமல், முழு நிரலையும் பொறி மொழியாக்கி இயக்கும் மொழிமாற்றியை (compiler) அடிப் படையாகக் கொண்ட பேசிக் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இவ்வாறு மொழி மாற்றப்பட்ட பேசிக் நிரல் மிக வேகமாக இயங் கும் என்பதால் தொழில் முறையான நிரல்களுக்கு இத்தகு பேசிக் மொழி யையே தேர்வு செய்வர்.

compiled language : மாற்றிய மொழி; தொகு மொழி : கணினியில் இயக்கப் படுவதற்கு முன் பொறிக் குறி முறையாக்கப்பட்ட ஒரு மொழி ஒவ் வொரு ஆணையாக மொழி பெயர்க் கப்பட்டு இயக்கப்படும் ஆணை மாற்று முறையிலிருந்து வேறுபட்டது. complied programme : தொகுக்கப் பட்ட நிரல்; மொழிமாற்றிய நிரல்.

compile time binding : தொகுநேர பிணைப்பு: மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழிமாற்றப் படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (Identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சிலவகை நிரல்களில் இப்பொறுப்பு, நிரல் இயக்கப்படும்போது முடிவு செய் யப்படுவதுண்டு.