பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

constant expression

115

control



constant expression : மாறாத் தொடர் : ஒரு நிரலில், அனைத்தும் மாறிலிகளால் ஆன ஒரு கணக்கீட்டுத் தொடர். நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும்வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு மாறாது.

constants and variables : மாறிலிகளும் மாறிகளும்.

Constant Angular velocity (CAV) ! மாறாக் கோண வேகம்.

Constant Linear Velocity (CAV): lomme நேர் வேகம்.

constant area : மாறாப் பரப்பு.

constellation : கொத்து; திரள் : தகவல் தொடர்பு அமைப்பில் சுமப்பி அலைகளின் (carrier wave) வெவ்வேறு நிலைகளை உருவகிக்கும் ஒரு தோரணி (pattern) அமைப்பு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட துண்மி சேர்க்கைகளைக் கொண்டிருக்கும். ஒரு தகவல் தொடர்பு சமிக்கையில் ஏற்படும், தனித்துக் காட்டக்கூடிய ஒவ்வொரு மாற்றத்தையும் அடையாளம் காட்டும் நிலைகளின் எண்ணிக்கையை இத்திரள் மூலம் அறியலாம். எனவே, ஒற்றை மாற்றத்தில் அதிகபட்சமாக குறிமுறைப்படுத்த வேண்டிய துண்மிகளின் எண்ணிக்கையை இது காட்டும்.

construct : கட்டு; கட்டமை; உருவாக்கு.

consumer electronics : நுகர்வோர் மின்னணுவியல்.

contact manager : தொடர்பு மேலாளர்.

context switching : சூழல் நிலை மாற்றம் : பல்பணி இயக்க முறைமையில் ஒருவகை மையச்செயலியின் கவனத்தை ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்குத் திருப்பும் செயல்முறை, ஒவ்வொரு பணிக்கும் நேரத்தைக் கூடுதலாக்கி மாற்றி மாற்றி ஒதுக்கீடு செய்யும் முறையிலிருந்து மாறுபட்டது. c

ontiguous : அடுத்தடுத்து; ஒட்டியுள்ள : பொது எல்லைக் கோட்டைக் கொண்ட அடுத்தடுத்த பகுதிகள். (எ-டு.) ஒரு வட்டில் அடுத்தடுத்த தகவல் குறிப்புகள் சேமிக்கப்பட்டுள்ள வட்டுப் பிரிவுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் முறை.

containing text : உரையடங்கிய.

content adviser : 2.உள்ளடக்க ஆலோசகர்

contiguous data structure : அடுத்தடுத்துள்ள தரவுக் கட்டமைப்பு.

continous forms : தொடர் படிவங்கள்.

continuous analysis : தொடர் பகுப்பாய்வு.

continuous stationary : தொடர் தாள்.

continuous tone printer : தொடர் மையச்சுப் பொறி : ஒருவகை அச்சுப்பொறி. உருவப் படங்களை அச்சிடும்போது சாம்பல் நிற அல்லது வண்ணப் படிமங்களைத் தொடர் மைபூச்சு முறையில் மிக இயல்பான வகையில் அச்சிடும்.

control : கட்டுப்பாடு; இயக்குவிசை: 1.ஒரு கணினியையும் அதன் செயல்பாடுகளையும் முறைப்படுத்தி மேலாண்மை செய்தல். பிழையற்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த சரியான நேரத்தில் சரியான வரிசையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். கட்டுப்பாடு என்னும் சொல் வன்பொருள், மென்பொருள் இரண்டுக்கும் பொருந்தக்