பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிப்போருக்கு தெளிவைத் தரவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். அதற்காக ஒரு ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இயன்றவரை பல கலைச்சொற்களைத் தருகிறேன். சான்றாக,

Data  : தகவல், தரவு, விவரம், செய்திக் குறிப்பு.
Mouse  : சுட்டி, கட்டுக் கருவி, சுட்டுப்பொறி, கட்டு நுண்பொறி.
Key  : விசை, திறவு, விரற்கட்டை, குமிழ், சாவி,
Pixel  : படக்கூறு, படப்புள்ளி, படத்துணுக்கு.

இதில் ஏதாவது ஒரு சொல் நிலைபேற்றுத் தன்மையைப் பெறதா என்ற எண்ணமும் நாளை தரப்படுத்தம் செய்ய விழையும்போது, ஒப்பீட்டாய்வு செய்வதற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் தேவைப்படுமே என்பதும் காரணங்களாகும்.

கணினித்துறை போன்ற அறிவியலுக்கான கலைச்சொல் உருவாக்கத்துக்கு இலக்கியத் தரமான சொற்களைப் பயன்படுத்த சிலர் விழைவதில்லை. உரிய பொருளை விளக்க அவைகளால் இயலாது என்று கருதப்படுகிறது. ஆனால், தக்க மாற்ற திருத்தங்களுடன் பயன்படுத்தினால் கருதிய பொருளைத் திட்ய, நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,

Jergon : குழுஉச் சொல்
Slug : பருங்குழை
Finesse : நய நுட்பம்
Host : ஒம்புநர், புரவலர்
Malfunction : பிறழ்வினை

என அமைக்கலாம்.

எல்லாவற்றிற்கும் இலக்கியச் சொல்லைத் தேடி ஒடவேண்டியதில்லை. அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சாதாரணச் சொற்களையே பயன்படுத்தி அறிவியல் செய்திகளை நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,

Jaggies : பிசிறுகள்
Pad : திண்டு
Glarefilter : கூசொளி வடிகட்டி

கலைச் சொல்லாக்கத்துக்கான வேர்ச்சொற்கள் வேண்டிய அளவுக்கு இலக்கிய நூல்களிலும் அன்றாட பேச்சு வழக்குச் சொற்களிலும் கிடைக்கின்றன. அவற்றைப் புதிய பகுதி, விகுதிகளோடு உருவாக்கினால் பொருளாழமிக்க சொற்களாக உருவாக்க இயலும்.

Quantum : துளியம்
Terminal : முனையம்
Bit : துண்மி
Robot : எந்திரன்
10