பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CPU cache

119

create shortcut


களுக்குப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒரு பொதுநல அமைப்பு. மனித சமூகத் தின் வாழ்வியல் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் மீது கணினிகளின் தாக்கம் இவைபோன்ற பிரச்சினைகளில் இவ்வமைப்பு நாட்டம் செலுத்துகிறது.

CPU cache : சி.பீ.யூ இடைமாற்றகம் : மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சிபியூவுக்குத் தேவையான அதாவது சி.பீ.யூ அடுத்துக் கையாளவிருக்கும் தகவல் மற்றும் நிறைவேற்றவிருக்கும் ஆணைகளையும் இந்த நினைவகப் பகுதி தற்காலிகமாகக் கொண்டிருக்கும். முதன்மை நினைவகத்துடன் ஒப்பிடுகையில் சி.பீ.யூ இடைமாற்று நினைவகம் அதிக வேகமுடையது. இதிலுள்ள தகவல், தொகுதி தொகுதியாகப் பரிமாறப்படுவதால் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. சி.பீ.யூவுக்கு அடுத்துத் தேவைப்படும் தகவல் எதுவென்பதை சில படிநிலைத் தருக்க முறையில் இயக்க முறைமை தீர்மானிக்கிறது. இது, இடைமாற்று நினைவகம் (cache memory) என்றும் நினைவக இடைமாற்று (memory cache) என்றும் அழைக்கப்படும்.

CPU cycle : சிபீயூ சுழற்சி : 1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு - ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக்கத்தைக் கொணர்தல் போன்ற மிக எளிய ஆணைகளை நிறைவேற்ற அல்லது செயல்பாடில்லா (NonOperation-No) ஆணையை நிறைவேற்ற சி.பீ.யூ எடுத்துக் கொள்ளும் நேரம்.

CPU fan : சி.பீ.யூ விசிறி : மையச் செயலகத்தின் மீது அல்லது சி.பீ.யூ வின் வெப்பக்கவர்வி மீது பொருத்தப்படும் ஒரு மின்சாரவிசிறி. சி.பீ.யூ வைச் சுற்றிக் காற்றைச் சுழலச் செய்து வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.

CPU speed : சி.பீ.யூ வேகம் : ஒரு குறிப்பிட்ட மையச் செயலகத்தின் தகவல் செயலாக்கத் திறனின் ஒப்பீட்டு அளவுகோல். பெரும்பாலும் மெகா ஹெர்ட்ஸில் அளக்கப்படும்.

.cr : .சி.ஆர் : ஒர் இணையதள கோஸ்டா ரீக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

cracker : தகர்ப்பர்; உடைப்பவர் : ஒரு கணினி அமைப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து அத்துமீறி நுழையும் நபர். ஒரு கணினி அமைப்பிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக தகவலைப் பெறுதல் அல்லது கணினி வளங்களைப் பெறுதல் - இதுவே சில தகர்ப்பர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், அமைப்பின் பாதுகாப்பை வெற்றிகரமாக உடைத்து உள்நுழைவது மட்டுமே பெரும்பாலான தகர்ப்பர்களின் மைய நோக்கமாய் உள்ளது.

crash, conversion : முறிவு நிலை மாற்றம்.

create image : படிமம் உருவாக்கு.

create replica : படி உருவாக்கு.

create root pane : மூளப் பாளம் உருவாக்கு.

create shortcut : குறுவழி உருவாக்கு.