பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

creating

120

cross foot


creating : உருவாக்குதல்.

crash recovery : முறிவு மீட்சி : ஒரு கணினியில் நிலைவட்டு பழுதடைவது போன்ற ஒரு பேரழிவுப் பழுதுக்குப்பின் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அக்கணினிக்கு இருக்கும் திறனை இவ்வாறு குறிப்பிடலாம். பெரும்பாலும், தகவலுக்கு எவ்வித இழப்பும் இல்லாமல் மீட்கப்பட முடியும். சிலவேளைகளில், முழுவதுமாக இல்லாவிட்டாலும் சிறிதளவு தகவல் இழக்கப்படுவதுண்டு.

creator : கிரியேட்டர் : ஆப்பிள் மெக்கின்டோஷில் உள்ள ஒரு நிரல். ஒர் ஆவணத்தை உருவாக்கும்போது அதற்கும் அதை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்புக்கும் இடையே ஒரு தொடுப்பினை உருவாக்கும் நிரல் இது. ஒரு ஆவணத்தைத் திறக்கும்போது, இயக்க முறைமையானது அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பை அடையாளம் கண்டு திறக்க இத்தொகுப்புப் பயன்படுகிறது.

creeping featurism : படரும் சிறப்பு கூற்றியல் : ஒரு மென்பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கியவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி விடாமல் இந்த முன்னேற்றங்களைச் செய்வர். சந்தையில் இதே போன்ற பிற மென்பொருள் தயாரிப்புகளுடன் போட்டியிடப் புதிய பதிப்பினை வெளியிடும் போது, மேலும் புதிய சிறப்புக் கூறுகளைச் சேர்த்து அதன் செய்திறனை மேம்படுத்த முயலும்போது இவ்வாறு நிகழ்கிறது.

cripped version : சுருக்கப் பதிப்பு : ஒரு வன்பொருள் அல்லது மென் பொருள் தயாரிப்பின் முன்னோட்டப் பதிப்பு, சுருங்கிய வடிவில் இருக்கும். குறைந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.

critical error : உயிர் பாடிப் பிழை : நெருக்கடிப் பிழை : கணினியின் செயலாக்கத்தையே இடைநிறுத்தம் செய்துவிடும் பிழை. ஒரு மென் பொருள் மூலமாகவோ, பயனாளரின் தலையீட்டினாலோதான் அப்பிழையைச் சரிசெய்ய முடியும். (எ-டு) இல்லாத ஒரு வட்டிலிருந்து படிக்க முயல்தல், அச்சுப் பொறியில் தாள் தீர்ந்துபோகும் நிலை, தரவுச் செய்தி அனுப்புகையில் சரிபார்ப்புத் தொகை (checksum)யில் ஏற்படும் பிழை, இன்ன பிற.

cross development : குறுக்கு உருவாக்கம்; மாற்று உருவாக்கம் : ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறுவகையான ஒரு முறைமைக்கான நிரல்களை உருவாக்குதல். இலக்கு முறை மையைக் காட்டிலும் உருவாக்கு முறைமையின் உருவாக்கக் கருவிகள் உயர்தரமானதாக இருப்பின் இது இயலும்.

cross foot : குறுக்குக் கால்; குறுக்குச் சரிபார்ப்பு : ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் கூட்டுத் தொகையைச் சரி பார்ப்பதைப் போன்றது.