பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

c shell

122

Ctrl-C


c shell : சி செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறையில் இயங்கும் பல்வேறு கட்டளைவரி இடைமுகங்களில் இதுவும் ஒன்று. சி-செயல்தளம் மிகவும் பயனுள்ளது. ஆனால் அனைத்து முறைமைகளிலும் சி-செயல்தளம் இருக்குமென்று சொல்ல முடியாது.

CSMACD : சிஎஸ்எம்ஏ/சிடி : சுமப்பி உணர்வு பல்முக அணுக்கம் மோதல் அறிதல் என்று பொருள்படும் Carrier Sense Multiple Access/Collusion Deduction என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு பிணைய நெறிமுறை (Network Protocol). ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட கணுக்களில் (Nodes) கோரிக்கை அனுப்பப்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலையைக் கையாள்வதற்கான நெறிமுறை. ஒவ்வொரு கணுவும் பிணையப் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். தடம், போக்குவரத்தின்றி இருக்கும்போது தகவலை அனுப்பும். அதே நேரத்தில் இன்னொரு கணுவும் தகவலை அனுப்பி மோதல் ஏற்படின் இரண்டு கணுவும் தகவல் அனுப்புவதை நிறுத்திவிடும். மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு கணுவும் வேறுவேறு கால அளவுகள் காத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின் தகவல் அனுப்ப முனையும்.

CSO : சிஎஸ்ஓ : கணிப்பணி சேவைகள் அலுவலகம் என்று பொருள்படும் Computing Services Office என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் பயனாளர்களின் சொந்தப் பெயர்களை மின்னஞ்சல் முகவரிகளுடன் ஒப்பிட்டுத் தேடித்தரும் இணையச் சேவையாகும். இது பெரும்பாலும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தேடும். கோஃபர் (Gopher) பிணையங்களின் வழியாக சிஎஸ்ஓ சேவையைப் பெறலாம். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஎஸ்ஓ-வில் இது உருவாக்கப்பட்டது.

CSO name server : சிஎஸ்ஓ பெயர் வழங்கன் : சி.எஸ்.ஒ அமைப்பின் மூலம் மின்னஞ்சல் முகவரி பற்றிய தகவலை வழங்கும் ஒரு கணினி.

CTL : சிடிஎல் : கன்ட்ரோல் (Control) என்ற சொல்லின் சுருக்கம்.

Ctrl-Alt-Delete : கன்ட்ரோல்-ஆல்ட்-டெலீட் : ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் மீட்டியக்கப் (reboot) பயன்படும் மூவிசைச் சேர்க்கை. Ctrl, Alt, Del என்று குறிக்கப்பட்டுள்ள மூன்று விசைகளையும் ஒருசேர அழுத்தினால் எம்எஸ் டாஸில் இயங்கும் கணினியில் இடைத்தொடக்கம் (warm boot) நடைபெறும். இம்முறையில் கணினி, அகப் பரிசோதனைகள் அனைத்தையும் மேற்கொள்வதில்லை. மின்சாரத்தை நிறுத்தித் தரும் முதல்தொடக்க (cold boot) முறையில் அனைத்துச் சரிபார்ப்புகளும் நிகழும். விண்டோஸ் 95/98/ என்டி/2000 இயக்க முறைமைகளில் Ctrl+Alt+Del விசைகளை அழுத்தும் போது ஒர் உரையாடல் பெட்டி தோன்றும். நடப்பிலுள்ள ஒரு பணியை மட்டும் முடித்து வைக்கலாம். அல்லது கணினியையே நிறுத்தவும் செய்யலாம்.

correction : திருத்தம்.

Ctrl-C : கன்ட்ரோல்-சி : 1. யூனிக்ஸ் இயக்க முறைமையில் இயங்கிக்