பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ctrl-S

123

current drain


கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை நடுவிலேயே முறிக்க இந்த இரு விசைகளையும் அழுத்த வேண்டும். 2. விண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் பல்வேறு பயன்பாடுகளிலும், தற்போது தேர்வு செய்துள்ள உருப்படியை (உரை, படம் எதுவும்) இடைநிலை நினைவகத்தில் நகலெடுத்துக் கொள்வதற்கான கட்டளை.

Ctrl-S : கன்ட்ரோல்-எஸ் : 1. மையக் கணினியுடன் முனையக் கணினி மென்பொருள் மூலம் கைகுலுக்கிக் கொள்கிறது. முனையக் கணினித் திரையில் தொடர் தகவல் திரையிடப்படும்போது இந்த இரு விசைகளையும் சேர்த்து அழுத்தும்போது அப்படியே நின்றுவிடுகிறது. மீண்டும் தொடர கன்ட்ரோல்-கியூ விசைகளை அழுத்த வேண்டும். 2. ஒர் ஆவணம் அல்லது கோப்பினைச் சேமிப்பதற்குப் பெரும்பாலான மென்பொருள் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் விசைச் சேர்க்கை.

corrupt data file : பழுதடைந்த தகவல் கோப்பு.

creation : உருவாக்கல்; தோற்றுவிப்பு.

creativity : படைப்பாக்கம்; படைப்புத் திறன்.

credit card number : பற்று அட்டை எண்: பணப் பொறுப்பு அட்டை எண்.

cropping : வெட்டுதல்.

CTS : சிடிஎஸ் : அனுப்பப் பாதை தயார் என்று பொருள்படும் Clear To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொடர்நிலை (analog) தகவல் தொடர்பில் இணக்கிகள் கணினிக்கு அனுப்பும் சமிக்கை. கணினி, தகவலை அனுப்பத் தொடங்கலாம் என்பது பொருள். ஆர்எஸ் 232-சி இணைப்புகளில் 5-வது தடத்தில் அனுப்பி வைக்கப்படும் வன்பொருள் சமிக்கை.

cross-linked file : குறுக்குத் தொடுப்புக் கோப்பு.

crunching : நொறுக்குதல்.

crystal bistability : இருநிலை படிகம்.

.cu : .சியூ : ஒர் இணைய தள முகவரி. கியூபா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

CUL 8 R : சியூஎல் 8 ஆர் : பிறகு சந்திக்கலாம் என்ற பொருள்படும் See You Later stop Glgirl fair விந்தையான சுருக்கச்சொல். இணையக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ள ஒருவர் தற்காலிகமாக அக்குழுவை விட்டு நீங்கும்போது விடைபெறும் முகத்தான் குறிப்பிடும் சொல்.

cumulative record: திரட்டுப் பதிவேடு.

current : மின்னோட்டம்; நடப்பு : 1. ஒரு கடத்தி வழியாக மின்னூட்டம் பாய்தல், அல்லது பாயும் அளவு. ஆம்பியர் என்னும் அலகினால் அளக்கப்படுகிறது. 2. ஒரு தரவுத் தளத்திலுள்ள அட்டவணையில் நடப்பு ஏடு என்கிறோம்.

current data : நடப்புத் தரவு.

current data base: நடப்புத் தரவு தளம்.

current drain : மின்னோட்ட ஒழுக்கு : 1. ஒரு மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்சாரம் பெறும் கருவி எடுத்துக் கொள்கின்ற மின்சக்தி. 2. ஒரு மின்குமிழ் விளக்கு