பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

current image

124

cybercafe or cyber cafe


மின்சாரத்தை எடுத்துக் கொண்டு எரி கிறது. மின்சாரம் ஒரு மின்கலனிலிருந்து வருகிறது எனில் மின்சக்தி, மின்கலனில் வடிந்து கொண்டிருப்பதாகக் கூறலாம். சில வேளைகளில் குமிழ் விளக்கையே ஒழுக்கு என்றும் கூறுவர்.

current image : நடப்பு படிவம்.

current instruction register : நடப்பு ஆணைப் பதிவேகம்.

current intensity: மின்னோட்ட வலிமை.

current value : தற்போதைய மதிப்பு.

cursor blink speed : காட்டி மினுக்கு வேகம்; இடஞ்சுட்டி மினுக்கு வேகம்: திரையில் தோன்றும் காட்டி, தோன்றி மறைந்து மினுக்குகின்ற வேகம்.

cursor key : காட்டி விசை; இடஞ் சுட்டி விசை; சுட்டுக்குறி விசை.

custodian : பொறுப்பாளர்.

custom : வழமை.

custom IC : வாடிக்கையான ஒருங்கிணைப்புச் சுற்று.

custom view : தனிப் பயன் தோற்றம்.

cut-sheet feader : நறுக்குத்தாள் செலுத்தி.

cutter path : வெட்டுப் பாதை.

cu see Me : சியூசீe : கார்னெல் பல்கலைக்கழகம் (Cornel University) உருவாக்கிய ஒளிக்காட்சி கலந்துரையாடல் (Video Conference) மென்பொருள். விண்டோஸ் மற்றும் மேக் ஒஎஸ் பயனாளர்கள் இணையத்தில் நிகழ்நேர ஒளிக்காட்சி கலந்துரையாடலில் பங்கு பெறுவதற்கான முதல் மென்பொருளாகும் இது. ஆனால், இந்த மென்பொருள் செயல்பட அதிகமான அலைக்கற்றை வேண்டும். குறைந்தது 128 கேபி பீ.எஸ் வேக அலைக்கற்றை இருந்தால்தான் சரியாகச் செயல்படும்.

cut/copy/paste : வெட்டு/நகலெடு/ஒட்டு.

cut-sheet feeder: நறுக்கு தாள் செலுத்தி.

.cv : .சிவி: ஓர் இணைய தள முகவரி கேப் வெர்தே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.cy : .சிஒய் : ஒர் இணைய தள முகவரி சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

cybercafe or cyber cafe : மின்வெளி உணவகம் : 1. இணையத் தொடர்புகள் உள்ள கணினி முனையங்களைக் கொண்ட சிற்றுண்டி விடுதிகள். இங்கே காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டே இணையத்தில் உலா வரலாம். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாப்பிட வருபவர்கள் இணையத்தைப் பார்வையிடவும், இணையத்தில் உலாவ வருபவர்கள் சாப்பிடவும் இங்கே வாய்ப்புக் கிடைக்கிறது. 2. இணையத்தில் இருக்கின்ற ஒரு மெய்நிகர் (virtual) உணவகம். இது பெரும்பாலும் சமூகப் பயன்களுக்கானது. இங்கே கூடுபவர்கள் அரட்டை நிகழ்ச்சி மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்திக்கொள்வர். அறிக்கைப் பலகை முறையில் செய்திகளைப் பரிமாறிக்கொள்வர். செய்திக் குழுக்கள் மூலமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர்.