பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data base utilities

127

data declaration


data base utilities : தரவுட்தள கூறுகள்.

data base wizard: தரவுத்தள வழிகாட்டி.

data bits : தகவல் துண்மிகள்: தரவு பிட்டுகள் : ஒத்திசைவில்லா தகவல் தொடர்பில், அனுப்பப்படும், ஒரெழுத்தைக் குறிக்கும் எட்டுத் துண்மிகளில் 5 முதல் 8 வரையுள்ள துண்மிகளை இவ்வாறு அழைப்பர். தரவுத் துண்மிகளுக்கு முன்பாக தொடக்கத் துண்மி (start bit) அனுபப்படும். அதன் பின், சமன் துண்மி (parity bit) அனுப்பப்படும். சமன் துண்மி அனுப்பப்படாமலும் இருக்கலாம். இறுதியில் ஒன்றிரண்டு நிறுத்த துண்மிகள் (stop bits) அனுப்பி வைக்கப்படும்.

data broadcasting : தரவு அலைபரப்பு.

data buffer : தரவி இடையகம் : கணினிச் செயல் பாட்டில் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை அனுப்பி வைக்கும்போது, தற்காலிகமாக இருத்திவைக்கப்படுகின்ற நினைவகப்பரப்பு.

data cable : தரவு வடம் : தொடர்புச் செயல்பாட்டில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்குத் தகவலை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இழை-ஒளிவ வடம் அல்லது கம்பி வடம்.

data channel multiplexer: தரவுத் தட ஒன்றுசேர்ப்பி.

data capture: தரவு பதிப்பி.

data catalog : தரவுப் பட்டிலியல்: தரவு அடைவு.

data conferencing: தரவுக் கலந்துரையாடல்: தகவல் கருத்தரங்கு : வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளல். ஒரிடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளை பல்வேறு இடங்களில் தரவுக் கலந்துரையாடல் பணிபுரிபவர்கள் அணுகவும் திருத்தவும் வழி செய்யும் மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியது.

data consistency: தரவு ஒத்திசைவு.

data control : கட்டுப்பாட்டுத்தரவு.

data declaration : தரவு அறிவிப்பு : விவர அறிவிப்பு : ஒரு நிரலில் பயன்படுத்தவிருக்கும் பல்வேறு விவரக் குறியீடுகளை நிரலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப் பயன்படும் ஒரு கூற்று (statement). எடுத்துக்காட்டாக, பணியாளர்களின் விவரங்களைக் கையாள பெயர், வயது, சம்பளம் போன்ற தரவு மாறிகளை (variables) அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கும் முறை மொழிக்கு மொழி