பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெளிவுக்காக இரு சிறு சொற்களை இணைத்துப் புதுச் சொல்லாக்கிப் பொருள் விளக்கம் பெறலாம். சான்றாக,

Antenna    :  அலைவாங்கி
Virus    :  நச்சுநிரல்
Audio    :  கேட்பொலி

கூடுமானவரை ஆங்கிலத்திலிருந்து சொல்லுக்குச் சொல் மொழி பெயர்ப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆங்கிலச் சொல் உணர்த்தும் பொருளை நுட்பமாகப் புரிந்து கொண்டு, அதனைத் திட்பமாக உணர்த்தும் சொற்களைக் கொண்டு சொல்ல முற்படவேண்டும். சான்றாக,

Handset      :   ஒலியுறுப்பு
Cold fault      :   உடன்தெரியும் பிழை
Creet      :  விளங்கா மொழி
Femaleconnector    :   துளை இணைப்பி
Gun      :  வீச்சுப்பொறி

ஒரு கணினிச் சொல் தனியாக வரும்போதும் சொல் தொடருடன் இணைந்து வரும்போதும் சொல் மாறாமல் இடம்பெறச் செய்வதன்மூலம் பொருள் தெளிவை அளிக்க முடியும். சான்றாக,

Input    : உள்ளீடு
Inputting    : உள்ளிடுதல்
Input data    : உள்ளிட்டுத் தகவல்
Input Unit    : உள்ளிட்டகம்

எனக் குறிக்கலாம்.

தலைப்பெழுத்துக்களைக் கொண்ட குறும்பெயர்களை ஒலி பெயர்ப்பாக இணைந்து வரும் சொற்களுக்குப் பொருள் தரும் வகையில் அமைக்கலாம். சான்றாக,

PERT Chart    : பெர்ட் வரைபடம்
PET Computer    : பெட் கணினி

மற்றபடி, நிறுவனப் பெயர்கள், மென்பொருள் தொகுப்புப் பெயர்கள், பொருட்பெயர்கள். அளவீடுகள் மற்றும் சிறப்பு பெயர்களை ஒலி பெயர்ப்பாகக் குறிக்கலாம்.

Macpaint    : மாக் பெய்ன்ட்
Herts    : ஹெர்ட்ஸ்
Javlin plus    : ஜேவ்லின் பிளஸ்
Hentry :    : ஹென்றி

மற்றொன்று ஒலிக்குறைபாடு. ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ ஒலிக்குறிகள் தமிழில் இல்லாததால் Geroge-ஐ குறிப்பிடும்போது 'சார்சு' என்றுதான் எழுத நேரும். இவ்வொலிக் குறைப்பாட்டை நீக்க 'ஜார்ஜ்' என்றே எழுதலாம். ஏனெனில்,

11