பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data driven processing 128 data library

வேறுபடும். ஆனால், அனைத்து முறைகளிலும் சில கூறுகள்-மாறியின் பெயர், தரவு இனம், தொடக்க மதிப்பு, உருவளவு ஆகியவை, பொதுவானவை.

C, C++, Java : char name[15]; int age;

              double pay; 

pascal  : name : string[15];

              age  : integer;
              pay  : real;

data driven processing : தரவு உந்து செயலாக்கம் : தரவு செயலாக்க முறைகளுள் ஒன்று. செயலி (Processor) அல்லது நிரல் (Programme), வரிசை முறையிலான செயல்பாடுகளில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் முன், தரவின் (data) வருகைக்காகக் கட்டாயமாகக் காத்திருக்க வேண்டிய நிலை.

data description standard : தரவு விவரிப்புத் செந்தரம்.

data description : தரவு விவரிப்பு.

data encryption key : தரவுமறையாக்கத் திறவி : ஒரு தகவலை மறையாக்கம் (encryption) செய்யவும், மறைவிலக்கம் (decryption) செய்யவும் பயன்படுத்தப்படும் மறைக்குறியீடு.

data entry form: தகவல் உள்ளீட்டுப் படிவம்; தரவு பதிவுப் படிவம்.

data/fax modem : தரவு/தொலை நகல் இணக்கி : துண்மித் தாரை (bit stream) வடிவிலான தகவலையும், பட உருவங்களையும் அனுப்பவோ பெறவோ பயன்படும் இணக்கி.

data form : தரவுப் படிவம்; தகவல் படிவம்.

data format : தரவு வடிவம் : கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப் படுகிறது. ஒரு தகவல் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அக்கட்டமைப்பையே தரவு வடிவம் என்கிறோம்.

data frame : தரவுத் தொகுதி, தரவுச்சட்டம்; தகவல் பொதி; தகவல் பொட்டலம் : கணினிப் பிணையங்களில் ஒற்றைத் தொகுதியாக அனுப்பப்படுகின்ற ஒரு தகவல் பொதி பிணையங்களின் தரவு தொடுப்பு அடுக்கு (Data Link Layer) தரவுச் சட்டத்தை நிர்ணயம் செய்கின்றது. பிணையக் கணுக்கள் (Network Nodes)இரண்டுக்கிடையே இணைக்கும் கம்பிகளில்தான் தரவுச் சட்டம் நிலவுகிறது. கணினிக்குள் நுழைந்த பிறகு சட்டம், பொதி என்ற பரிமாணத்தை இழக்கிறது.

data hiding : தரவு மறைப்பு.

data input & verification : தகவல் உள்ளிடு மற்றும் சரிபார்த்தல்.

data library : தரவு நூலகம் : வட்டு அல்லது அதுபோன்ற சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் கோப்புகளின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு, தகவல் தரவு நூலகம் எனப்படுகிறது.