பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data link layer

129

data processing


data link layer : தரவுத் தொடுப்பு அடுக்கு: இரண்டு கணினிகளுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்துக்கான வரையறுப்புகள் ஐஎஸ்ஓ குழுவினால் தரப்படுத்தப்பட்டுள்ளன. அது ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ மாதிரியம் (1SO/OSI model) என்று அழைக்கப்படுகிறது. தகவல் பரிமாற்றத்தில் ஏழு அடுக்குகள் (Layers) வரையறுக்கப்பட்டுள்ளன. அவை ஓஎஸ்ஐ அடுக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றுள் இரண்டாவது அடுக்கு தகவல் தொடுப்பு அடுக்கு எனப்படுகிறது. பருவநிலை அடுக்குக்கு (Physical Layer) மேலாக அமைந்துள்ளது. இரண்டு சாதனங்களுக்கிடையே உண்மையில் தகவலைப் பரிமாற்றம் செய்கின்ற மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம் மற்றும் போக்குவரத்து அடுக்குகள்) கீழ் நிலையில் இந்த அடுக்கு அமைந்துள்ளது.

data link level : தரவுத் தொடுப்பு நிலை; தகவல் இணைப்புப் படித்தளம்.

data manager : தரவு மேலாளர்.

data manipulation instruction : தரவு கையாள்தல் ஆணை.

data mart : தரவுக் குறுங்கிடங்கு; மிகப்பரந்த அளவிலான தகவல் சேமிப்பு, தகவல் கிடங்கு (Data Warehouse)எனப்படுகிறது. தகவல் கிடங்கின் ஒரு சுருங்கிய வடிவம் தகவல் குறுங்கிடங்கு எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவின் தேவைகளை மட்டும் நிறைவுசெய்யும் தகவல்களைக் கொண்டுள்ள கிடங்கு.

data manipulation & analysis : தரவு கையாள்தல் மற்றும் பகுப்பாய்வு.

data migration : தரவு இடப்பெயர்வு: 1. தரவுத் தளம் போன்ற ஒரு சேமிப் பிடத்திலிருந்து இன்னொன்றுக்கு தகவலைப் பெயர்த்தெழுதும் செயல்முறை. பெரும்பாலும் இத்தகைய இடப்பெயர்வு தானாக இயக்கப்படும் நிரல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய இடப்பெயர்வில் தகவல் பெரும்பாலும் ஒருவகைக் கணினி அமைப்பிலிருந்து வேறுவகைக் கணினி அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். 2. மீத் திறன் கணினிப் (Super Computer) பயன்பாடுகளில், அகல் நிலை (offline)-யில் ஏராளமான தகவல்களை பதிவுசெய்து அவற்றை வட்டுக் கோப்புகளாய் நிகழ்நிலை (online) தகவலாய்க் கிடைக்கச் செய்யும் முறை தரவு இடப்பெயர்வு எனப்படும்.

data mining : தரவுச் சுரங்கம்; தகவல் அகழ்ந்தெடுப்பு : தரவுத் தளங்களிலும் மற்றும் அதுபோன்ற கணினிச் சேம வைப்புகளிலும் வணிக முறையிலான பயனுள்ள தோரணி (pattern) களையும், உறவு முறைகளையும், மிக உயர்நிலை புள்ளியியல் நுட்பம் மூலமாகக் கண்டறியும் செயல்முறை.

data, numeric : எண்வகைத் தரவு.

data output & presentation : தரவு வெளியீடு மற்றும் சமர்ப்பித்தல்.

data plotter : தரவு வரைவு பொறி.

data privacy : தரவு இரகசியம்; தகவல் கமுக்கம்; தரவுத் தனிமறைவு.

data processing: தரவுச் செயலாக்கம்: 1. கணினியில் செய்யப்படும் பொதுவான பணி. 2. குறிப்பாக, தேவையான முடிவுகளைப் பெறுவதற்காக தரவுகளை தக்கவாறு மாற்றியமைக்கச் செயல்படுத்தும் முறை.