பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ᎠCᎠ

131

DCOM




(Document Content Architecture) என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎம்மின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (System Network Architecture - SNA) பயன்படுத்தப்பட்ட, ஆவணங்களின் வடிவாக்கம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை இது குறிக்கிறது. வெவ்வேறு வகையான கணினிகளுக்கிடையே உரை மட்டும் உள்ள ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதை இது சாத்தியமாகிறது. டிசிஏ, இருவகையான ஆவண வடிவாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்றில், வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய முடியும் (Revisable Form Text DCA). இன்னொன்றில் அத்தகைய மாறுதல்களைச் செய்ய முடியாது (Final Form Text DCA).

DCD : டிசிடி : தரவுச் சுமப்பி அறியப்பட்டது என்று பொருள்படும் Data Carrier Detected என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரண்டு கணினிகளுக்கிடையேயான நேரியல் தகவல் பரிமாற்றத்தில் (Serial Communication) ஓர் இணக்கி (Modem), தகவலை அனுப்பத் தயாராயிருக்கிறது என்பதை உணர்த்த, இணக்கியிலிருந்து கணினிக்கு அனுப்பி வைக்கப்படும் சமிக்கை.

DCE : டிசிஇ : தகவல் தொடர்பு சாதனம் என்று பொருள்படும் Data Communication Equipment என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஆர்எஸ்-232-சி நிலை இணைப்பில் இருவகை உண்டு. ஒன்று டிசிஇ இன்னொன்று, டி.டீஇ (DTE-Data Terminal Equipment),டிசிஇ ஓர் இடைநிலை சாதனம். ஒரு டிடிஇயிலிருந்து வரும் உள்ளீட்டை பெறுநருக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பாக, ஏற்புடைய தகவலாய் மாற்றியமைக்கும். எடுத்துக்காட்டாக ஓர் இணக்கி, டிசிஇ-யாகச் செயல்படுகிறது. டிடிஇ-யாக இருக்கும் கணினியிலுள்ள தகவலை இணக்கமான வடிவத்தில் (Analog) மாற்றி, தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கிறது.

decimal arithmatic, floating : மிதவைப் புள்ளி பதின்மக் கணக்கீடு.

decimal, coded: குறிமுறைப் பதின்மம்.

decimal notation, binary coded : இருமக் குறியீட்டுப் பதின்மக் குறிமானம்.

decimal point, actual : உண்மைப் பதின்மப் புள்ளி.

decoding : குறிவிலக்கம்; குறிமொழி மாற்றல்.

D.COM : டிகாம் : பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள்படும் Distributed Component Object Model என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தொழில்நுட்பத்தின் விரிவாக்கம். விண்டோஸ் அடிப்படையிலான பிணையங்களில் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குத் துணை புரியும் ஆக்கக் கூறுகள் தமக்குள்ளே எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை இத்தொழில் நுட்பம் வரையறுக்கிறது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புக்குத் தேவையான பல்வேறு ஆக்கக் கூறுகள் ஒரு பிணையத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பகிர்ந்தமைவதை இத்தொழில்நுட்பம் சாத்தியமாக்குகிறது. பயனாளரின் பார்வையில்