பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

design, systems

137

determinant


design, systems : முறைமை வடிவமைப்பு.

design template : வடிவமைப்பு படிம அச்சு.

design time : வடிவமைப்பு நேரம்.

desktop conferencing : கணினிக் கலந்துரையாடல் கணினிக் கருத்தரங்கு : தொலைதூர ஊர்களில் உள்ளவர்கள், ஒரே நேரத்தில் கணினி வழியாகக் கூடிப் பேசல். அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இத்தகவல் தொடர்பில் பயன்பாட்டு நிரல்களிலுள்ள தகவல்கள் மட்டுமின்றி கேட்பொலி(audio) ஒளிக்காட்சி (video) தகவல் பரிமாற்றமும் இயலக் கூடியதே.

desktop enhancer : மேசைக் கணினித் திறன்கூட்டி : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ், மேக் ஓஎஸ் போன்ற சாளரக் காட்சி அடிப்படையிலான இயக்க முறைமைகளின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டும் மென்பொருள் தொகுப்பு. திறன் மிகுந்த கோப்பு உலாவி, இடைச் சேமிப்புப் பலகை (clipboard) மற்றும் Listort & Qué5) (multimedia player) போன்ற வசதிகள் இதில் அடங்கும்.

desktop management interface : கணினிவழி மேலாண்மை இடைமுகம்.

desktop video : மேசைக் கணினி ஒளிக்காட்சி; ஒளிப்படங்களைத் திரையிட சொந்தக் கணினியைப் பயன்படுத்துதல். ஒளிக்காட்சிப் படங்களை ஒளிக்காட்சிச் சுருளில் பதிவு செய்யலாம். அல்லது லேசர் வட்டுகளில் பதியலாம். அல்லது படப்பிடிப்புக் கருவி மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதியப்பட்ட ஒளிக்காட்சிப் படங்களை இலக்கமுறை (digital) வடிவில் அனுப்பி ஒரு பிணையத்தின் மூலம் நிகழ்படக் கலந்துரையாடலில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

desktop file : மேசைக் கணினிக் கோப்பு : ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஒரு வட்டிலுள்ள கோப்புகளின் விவரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்பு. இக்கோப்பு மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

despatch : அனுப்பு.

destination file : சேரிடக் கோப்பு.

destination, object : சேரிட இலக்கு.

destructive operation : சிதைப்பச் செயல்பாடு; அழிப்புச் செயல்பாடு.

destructive read: அளித்திடும் படிப்பு : சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நினைவகத்திலுள்ள தகவல் அழிக்கப் பட்டுவிடும். இத்தகைய நினைவக அமைப்பில் அழிக்கப்பட்ட இடத்தில் தகவலை மறுபடியும் எழுதுவதற்கு தனிச் சிறப்பான நுட்பம் தேவைப்படும்.

detail band : விவர கற்றை.

detail view : விளக்கமான பார்வை; விளக்கக் காட்சி.

determinant : தீர்வுப் பண்பு : தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாயின், அத்தகைய பண்புக் கூறு/கூறு