பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digital camera

141

digital micromirror display


digital camera : இலக்கமுறை படப்பிடிப்புக் கருவி, எண்ணுருப் படமாக்கி : வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங்களைப் பதிவுசெய்யும் கருவி. இக்கருவியில் மின் ஏற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக்கருவியின் மூடியைத் திறக்கும் போது, லென்ஸ் வழியாக பட உருவத்தை சிசிடி உள் வாங்குகிறது. பிறகு அப்பட உருவம், படக் கருவியின் உள்ளே இருக்கும் நிலை நினைவகம் அல்லது நிலைவட்டில் சேமிக்கப்படுகிறது. படக்கருவியுடன் தரப்படும் மென்பொருளின் உதவியுடன் பதியப்பட்ட படஉருவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வருடுபொறி மற்றும் அது போன்ற உள்ளீட்டுக் கருவிகள் மூலம் கணினியில் கையாளும் படங்களைப் போன்றே படப்பிடிப்புக் கருவி மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்ட படத்தையும் நாம் விரும்பியவாறு திருத்தி, சீரமைத்து வைத்துக் கொள்ளலாம்.

digital clock : இலக்கக் கடிகாரம்.

digital data storage : இலக்கமுறை தரவுச் சேமிப்பு.

digital display : இலக்கமுறை திரைக்காட்சி; எண்ணுருத் திரைக் காட்சி : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறங்களில் அல்லது சாம்பல் நிறத்தில் மட்டுமே நிகழ் படத்திரைக்காட்சி சாத்தியமாகும் காட்சிமுறை. ஐபிஎம் அறிமுகப்படுத்திய ஒருநிறக் (Monochrome) காட்சி, சிஜிஏ (Colour Graphics Array), இஜிஏ (EGA-Enhanced Graphics Array) ஆகியவை இவ்வகையைச்சேர்ந்தவை.

digital image processing : இலக்கமுறைப் படிமச் செயல்முறை.

digital imaging : இலக்கமுறைப் படிமமாக்கல்.

digital line : இலக்க முறை இணைப்புத் தடம்; எண்ணுரு வழித்தடம் : இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தகவல் பரிமாற்ற இணைப்புத் தடம். தகவல் சிதைவு மற்றும் இரைச்சல் குறுக்கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தகவல் சமிக்கைகளை மீட்டுருவாக்கம் செய்யும் திறன்மிகுப்பு நிலையங்கள் (Repeaters) பயன்படுத்தப் படுகின்றன.

digital linear tape: இலக்கமுறை வரிசை நாடா; எண்ணுரு வரிசை முறை நாடா ஒரு காந்தவகை சேமிப்பு ஊடகம். பாதுகாப்பு நகலெடுக்கப் பயன்படுகிறது.பழைய நாடாத் தொழில்நுட்பங்களைவிட வேகமான தகவல் பரிமாற்றம் இயலும்.

digital mail :இலக்கமுறை மின்னஞ்சல்,

digital micromirror display : இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி; எண்ணுரு நுண்ணாடித் திரைக்காட்சி : டெக்சஸ் இன்ட்ஸ்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கமுறை திரைக்காட்சிக் கருவியில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுத் தொழில்நுட்பம். 0.002 மிமீ-க்கும் குறைவான அகலமுள்ள நுண்ஆடிகள் தொகுப்பாக ஒரு சிப்புவில் பொருத்தப்பட்டிருக் கும். இதனைத் திருகி ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து திரைக்காட்சி சாதனத்தின் லென்ஸ்மீது விழச்