பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



digital multipliear

142

digital video disc


செய்யலாம். இதனால் மிகப் பிரகாசமான முழுவண்ணத் திரைக்காட்சியை உருவாக்க முடியும். 1,920x1,035 (1,987,200) படப்புள்ளிகளும் (pixels), 6 கோடியே 40 இலட்சம் நிறங்களும் கொண்ட தெளிவான திரைக்காட்சியை உருவாக்க முடியும்.

digital multipliear : இலக்கமுறை பன்முகப் பெருக்கி.

digital optical recording: இலக்கமுறை ஒளிவப் பதிவாக்கம்,

digital photography : இலக்கமுறை ஒளிப்படக்கலை; எண்ணுரு ஒளிப்படவியல் : இலக்கமுறை (எண்ணுரு) ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்தும் ஒளிப்படக்கலை. வழக்கமான ஒளிப்படத் தொழில்நுட்பத்திலிருந்து இலக்கமுறை ஒளிப்பட நுட்பம் மாறுபட்டது. ஓர் உருப்படத்தைப் பதிவுசெய்ய சில்வர் ஹேலைடு தடவிய ஃபிலிம் இலக்க முறை ஒளிப்படக் கருவியில் பயன் படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, இலக்கமுறைப் படக்கருவி உருவப்படங்களை மின்னணு முறையில் பதிவுசெய்கிறது.

digital signal : இலக்கமுறை சைகை; இலக்கமுறை சமிக்கை.

digital signature : மின்னணுக் கையொப்பம்; இலக்கமுறைக் கையொப்பம்; எண்ணுருக் கையொப்பம்: மின்னணு ஆவணங்களில் பயன் படுத்தப்படும் இரகசியக் குறியீட்டு முறைக் கையொப்பம். ஒருவர் தானே உரிமைச் சான்றளிக்கும் முறையாகும். மறையாக்கத்தையும் (encryption), இரகசிய சான்றுறுதிக் குறியீட்டையும் அடிப்படையாகக் கொண்டது.

digital simultaneous voice and data : இலக்கமுறையில் ஒரே நேரத்தில் குரலும் தகவலும் : மல்ட்டி டெக் சிஸ்டம்ஸ் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள ஒரு நவீனத் தொழில் நுட்பம். ஒற்றைத் தொலைபேசித் தடத்தில் உரையாடலையும், தரவுப் பரிமாற்றத்தையும் இயல்விக்கும் தொழில்நுட்பம். குரலை அனுப்ப வேண்டிய தேவை எழும்போது பொதித் தகவல் பரிமாற்ற முறைக்கு மாறிக் கொள்ளும். இலக்கமுறையாக்கப்பட்ட குரல் பொதிகள், கணினித் தகவல் மற்றும் கட்டளைப் பொதிகளோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.

digital subscriber line: இலக்கமுறை வாடிக்கையாளர் இணைப்பு : இது ஓர் ஐஎஸ்டிஎன் பிஆர்ஐ இணைப்பு அல்லது தடம். வாடிக்கையாளரின் வளாகம் வரை இலக்கமுறைத் தகவல் பரிமாற்றம் இயலும். முந்தைய தொலைபேசித் தடத் தகவல் பரிமாற்றத்திலிருந்து மாறுபட்டது. சுருக்கமாக டிஎஸ்எல் (DSL) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வழித்தடத்தில் இணைய இணைப்புப் பெற்றால் 24 மணி நேர இணையத் தகவல் பரிமாற்றம் இயலும். அதிவேகத் தகவல் பரிமாற்றமும், குறைந்த நேரத்தில் அதிக அளவு பதிவேற்றமும் பதிவிறக்கமும் இயலும்.

digital telephone : இலக்கமுறைத் தொலைபேசி,

digital switching (DVI): இலக்கமுறை இணைப்பாக்கம்.

digital versatile disk: இலக்கமுறைப் பல்திறன் வட்டு,

digital video disc : ஒளிக்காட்சி வட்டு; எண்ணுரு நிகழ்