பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



digital video disc-recordable

143

Diku MUD


பட வட்டு : அடுத்த தலைமுறை ஒளி வட்டுத் சேமிப்பகத் தொழில்நுட்பம். ஒரு குறுவட்டில் கேட்பொலி, ஒளிக்காட்சி மற்றும் கணினித் தகவல் ஆகியவற்றை ஒருசேரச் சேமித்துவைக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது. வழக்கமான குறுவட்டைவிட அதிகமான தகவல்களை ஒரு இலக்கமுறை ஒளிக்காட்சி குறுவட்டு சேமிக்க முடியும். ஒருபக்க-ஓரடுக்கு வட்டில் 4.7 ஜி.பி வரை தகவலைச் சேமிக்க முடியும். ஒருபக்க ஈரடுக்கு வட்டில் 8.5 ஜி.பி வரை சேமிக்கலாம். இருபக்க -ஈரடுக்கு வட்டில் 17 ஜி.பி வரை சேமிக்கலாம். இந்த வட்டுகளைப் படிக்க தனியான இயக்ககம் (Drive) உண்டு. இந்த இயக்ககம் (Drive) பழைய லேசர் வட்டுகள், குறு வட்டுகள், கேட்பொலிக் குறுவட்டுகள் ஆகிய அனைத்தையும் படிக்கும். டிவிடி (DVI) என்பது தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

digital video disc-recordable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு - பதியமுடிவது: எண்ணுரு நிகழ்பட வட்டு - எழுதமுடிவது : பயன் பாட்டுக்கு வரப்போகின்ற, இலக்க முறை ஒளிக்காட்சி வட்டில் ஒரு வகை. நுகர்வோர் இந்த வட்டில் ஒரு முறை எழுதிக்கொள்ள முடியும்.

digital video disc-erasable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு - அழித்தெழுத முடிவது: எண்ணுரு நிகழ்படவட்டு - அழித்தெழுத முடிவது : பயன்பாட்டுக்கு வரப் போகிற ஒளிக் காட்சி வட்டில் ஒரு வகை. நுகர்வோர் இந்த வட்டில் உள்ள விவரங்களை பலமுறை அழித்து மீண்டும் எழுதிக்கொள்ள முடியும்.

digital video disc-ROM: இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு - படிக்க மட்டும்; எண்ணுரு நிகழ்பட வட்டு - படிக்க மட்டும் : இப்போது பயன்பாட்டில் உள்ள ஒளிக்காட்சி வட்டு. இதிலுள்ள விவரங்களைப் படிக்க மட்டுமே முடியும். அழித்தெழுத முடியாது. 4.7 மற்றும் 8.5 ஜி.பி கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. ஒருபுறம் ஒரடுக்கு, ஒருபுறம் ஈரடுக்கு இருபுறம் ஓரடுக்கு இருபுறம் ஈரடுக்கு என நான்கு முறைகளில் இந்த வட்டில் தகவல்கள் பதியப்படுகின்றன. அதிக அளவாக 17 ஜி.பி வரை தகவல் பதியமுடியும்.

Digital Video Interactive (DVI) : இலக்கமுறை ஒளிக்காட்சி உறவாடல்: எண்ணுரு நிகழ்பட ஊடாடல் : ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து, நுண்கணினிப் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்காக உருவாக்கிய, இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் கேட்பொலித் தகவல் சுருக்க முறை. வன்பொருள், மென்பொருள் இணைந்த ஓர் அமைப்பு.

Diku MUD : டிக்குமட் : 1. டச்சு நாட்டில் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறையில் பணியாற்றிய ஐந்து பேரின் டேனிஷ் மொழித் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிக்கு (DIKU) உருவாக்கிய மென்பொருள், பல்பயனாளர் பாழ்பொந்து என்று பொருள்படும் Multi User Dungeon என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கத்துடன் (MUD) சேர்ந்து டிக்குமட் (DIKUMUD) என்றாயிற்று. டிக்குமட் பல்லூடகப் பயன்பாடு உடையது. பொருள் நோக்கிலானது.