பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dirty bit

146

disc



பயன்படும் சொல். அதிகப்படியான இரைச்சல் காரணமாக தகவல் சமிக்கையின் தரம் தாழ்ந்து போதல்.

dirty bit: அழுக்கு பிட், மாசுத்துண்மி : முதன்மை நினைவகத்திலுள்ள தகவல் உடனடிப் பயன்பாட்டுக்கென இடைமாற்று (cache) நினைவகத்தில் இருத்தப்படுகிறது. அத்தகவல் மாற்றம் அடைந்துள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படும் துண்மி. இதனை அடையாளமாகக் கொண்டே முதன்மை நினைவகத்திலுள்ள தகவலும் மாற்றம் செய்யப்படுகின்றது.

dirty ROM: அழுக்கு ரோம்; அழுக்குறு அழியா நினைவகம் : படிக்க மட்டுமே முடிகிற (திருத்த/அழிக்க முடியாத) நினைவகத்தை ரோம் என்கிறோம்.

disabled folders : செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள் : மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் பல்வேறு கோப்புறைகள் இவ்வாறு ஆக்கப்பட்டுள்ளன. முறைமைக் கோப்புறையில் உள்ள பல்வேறு கோப்புகள், முறைமை நீட்டிப்புகள், கட்டுப்பாட்டு பாளங்கள் மற்றும் நீட்டிப்பு மேலாளர் (Extension Manager) எனப்படும் மென்பொருள் கருவிகொண்டு கணினியிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய உறுப்புகளையும் இக்கோப்புறைகள் கொண்டுள்ளன. செயல்முடக்கப்பட்ட கோப்புறையில் தற்போதுள்ள உறுப்புகள், கணினியை இயக்கும்போது தொடக்கத்தில் நிறுவப்படுவதில்லை. ஆனால், அதன்பிறகு நீட்டிப்பு மேலாளர் நிரலால் அவ்வுறுப்புகள், அவற்றின் இயல்பான கோப்புறைகளுக்கு தாமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

disassociate : தொடர்புநீக்கம் : விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒர் ஆவணம் ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, .doc என்ற துணைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வேர்டு பயன்பாட்டுடனும், xls ஆவணங்கள் எக்செல், .mdb ஆவணங்கள் அக்செஸ், .ppt ஆவணங்கள் பவர்பாயின்ட், .htm ஆவணங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவற்றுடனும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொடர்பினை மாற்றியமைக்க முடியும். .bmp ஆவணங்கள் பெயின்ட் பயன்பாட்டுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. .bmp ஆவணம் ஒன்றின் பெயர்மீது இரட்டைக் கிளிக் செய்தால், அந்த ஆவணம் பெயின்ட் பயன்பாட்டில் திறக்கப்படும். இதனை மாற்றி, கோரல் பெயின்ட் பயன்பாட்டில் அல்லது பெயின்ஷாப் புரோவில் திறக்கும் படி செய்யலாம்.

disaster planning : பேரிடர் திட்டப்பதிகை.

disc : வட்டு; (குறிப்பாக ஒளிவட்டு): வட்டினைக் குறிக்க Disc, Disk ஆகிய இரண்டு சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. லேசர் ஒளிக்கதிர் மூலம் எழுத/படிக்க முடிகிற, காந்தத் தன்மையற்ற உலோகப் பூச்சுள்ள பிளாஸ்டிக் வட்டுகள் Disc என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. அவையல்லாத ஏனைய வட்டுகள், நெகிழ்வட்டு, நிலைவட்டு, ரேம் வட்டு (நினைவகத்தில் உருவாக்கப்படும் மெய்நிகர் வட்டு) ஆகியவை Disk என்ற சொல்லால் குறிக்கப்படு கின்றன. லேசர் வட்டு, குறுவட்டு, கேட் பொலி/ஒளிக்காட்சி வட்டு டிவிடி வட்டு ஆகியவை பெரும் பாலும் Disc என்று குறிக்கப்படுகின்றன.