பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

am working on this now... please dont edit

disconnect

147

disk server

disconnect : துண்டிப்பு: துணி(த்தல்): ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல்.


discrete multitone : தொடர்ச்சியற்ற பல்தொனி: தொலை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம். இருக்கின்ற அலைக்கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு தடங்களாகக் கூறுபோட்டு, ஒர் இணைச் செப்புக் கம்பியில் 6 mbps '(வினாடிக்கு 60 இலட்சம் துண்மிகள்) தகவல்வரை அனுப்ப, இத் தொழில்நுட்பம் வகை செய்கிறது.


discretionary access control : தனி விருப்ப அணுகுக் கட்டுப்பாடு.


discussion groups : இணைய விவாதக் குழுக்கள்; இணையக் கலந்துரையாடல் குழுக்கள் : தமக்கிடையே பொதுவான ஆர்வமுள்ள பொருள்பற்றி கணினிப் பிணையத்தில் கலந்துரையாடும் பயனாளர்களைக் குறிக்கிறது. இணையத்தில் மின்னஞ்சல் பட்டியல், இணையச் செய்திக் குழுக்கள் மற்றும் ஐஆர்சி எனப்படும் இணையத் தொடர் அரட்டை போன்றவற்றைக் குறிக்கவே இப்போது இச்சொல்தொடர் பயன்படுத்தப்படுகிறது.


disk capacity : வட்டுக் கொள்ளளவு.


disk change : வட்டு மாற்று.


disk change sensor : வட்டு மாற்று உணரி.


disk cleanup : வட்டு செம்மை செய்.


disk, compact: குறுவட்டு.


disk controller : வட்டுக்கட்டுப்படுத்தி.


disk drive controller : வட்டு இயக்ககக் கட்டுப்படுத்தி.


disk drive, floppy : நெகிழ்வட்டு இயக்ககம்.


disk, hard : நிலைவட்டு.


disk interface : வட்டு இடைமுகம் : 1. வட்டகத்தை (disk drive) கணினியுடன் இணைக்கப் பயன்படும் இடையிணைப்பு மின்சுற்று அமைப்பு. 2. வட்டகங்களைக் கணினியுடன் இணைப்பதற்கென உருவாக்கப்பட்ட தர வரையறை. எடுத்துக்காட்டாக, எஸ்டீ506 (ST 506) என்பது, நிலைவட்டுகளை கணினியுடன் இணைக்கப் பின்பற்றப்படும் வட்டு இடைமுகத் தர வரையறை ஆகும்.

disk library : வட்டு நூலகம்.


disk, magnetic : காந்த வட்டு.

disk server : வட்டு வழங்கன்; வட்டு வழங்கன் கணினி : ஒரு குறும் பரப்புப் பிணையத்தில், பயனாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கான வட்டினைக் கொண்ட ஒரு கணுக் கணினி. இது கோப்புப் வழங்கனிலிருந்து (File Server) மாறுபட்டது. கோப்பு வழங்கன் பயனாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஏற்றுக் கோப்புகளை வழங்கும். மிகவும் நுட்பமான மேலாண் மைப் பணிகளையும் மேற்கொள்ளும். ஆனால் வட்டுவழங்கன் மேலாண்மைப் பணி எதுவும் செய்வ தில்லை. வெறுமனே ஒரு தகவல் சேமிப்பகமாகச் செயல்படும். பயனாளர்கள் வட்டு வழங்கனிலுள்ள கோப்புகளைப் படிக்கலாம்/எழுதலாம். வட்டு வழங்கனிலுள்ள வட்டினைப் பல்வேறு தொகுதி (Volume)களாகப் பிரிக்க லாம். ஒவ்வொரு தொகுதியும் ஒரு தனிவட்டுப் போலவே செயல்படும்.