பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disk storage 148 distributed processing

disk storage : வட்டுச் சேமிப்பகம்.

disk/track info : வட்டு/தடத் தகவல்.

dispatch table : அனுப்புகை அட்டவணை : குறுக்கீடு (interrupt) களைக் கையாளும் செயல்கூறுகள் (functions) அல்லது துணை நிரல்களின் முகவரிகளைக் கொண்ட அட்டவணை. ஒரு குறிப்பிட்ட சமிக்கை கிடைத்தவுடனோ, அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலோ நுண்செயலி, அட்டவணையில் குறிக்கப்பட்ட குறிப்பிட்ட துணைநிரலைச் செயல்படுத்தும்.

disperse : கலைத்தல்; பிரித்தல் : ஒரு குறிப்பிட்ட தகவல் தொகுதியைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் கிடைக்கும்படி செய்தல். எடுத்துக் காட்டாக அட்டவணைக் கோப்பிலுள்ள ஏடுகளில் (records) உள்ள புலங்களைப் (fields) பிரித்து, வெளியீட்டின்போது வெவ்வேறு இடங்களில் கிடைக்கச் செய்தல்.

display card : காட்சி அட்டை.

display control : காட்சிக் கட்டுப்பாடு.

display memory : காட்சி நினைவகம்.

display port : திரைக்கட்சித் துறை : கணினியிலுள்ள வெளியீட்டுத்துறை. காட்சித் திரை போன்ற வெளியீட்டுச் சாதனத்துக்குரிய சமிக்கைகளை இத்துறையின் வழியாகப் பெறலாம்.

dispose : முடித்துவை.

disable : முடக்கு.

distribute : பகிர்ந்தளி; பகிர்ந்தமை : ஒரு பிணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள கணினிகள் மற்றும் பிற சாதனங்களின் தொகுதியால் நிறை வேற்றப்படும் தகவல் செயலாக்கம் போன்ற செயல்பாடுகளை, பல்வேறு கணினிகளுக்கிடையே பகிர்ந்தமைத்தல்.

distributed bulletin board : பகிர்ந்தமை அறிக்கைப்பலகை : ஒரு விரிபரப்புப் பிணையத்திலுள்ள அனைத்துக் கணினிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்ற செய்திக் குழுக்களின் தொகுதி.

distributed computing : பகிர்ந்தமை கணிப்பணி.

distributed computing environment : பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல்; பகிர்மானக் கணிமைச் சூழல் : ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தளங்களில் செயல் படக்கூடிய பகிர்ந்தமை பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தர வரையறைத் தொகுப்பு. வெளிப்படை குழு என்ற குழுவினர் உருவாக்கியது. இக்குழு, முன்பு, வெளிப்படை மென்பொருள் அமைப்பு (Open Software Foundation) என்ற பெயரில் நிலவியது.

distributed database management system : பகிர்ந்தமை தரவுத்தள மேலாண்மை முறைமை : பகிர்ந்தமை தரவுத் தளங்களைக் கையாளும் திறன்பெற்ற ஒரு தரவுத் தள மேலாண்மை முறைமை.

distributed processing : பகிர்ந்தமை செயலாக்கம் : ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட தனித்தனிக் கணினிகளால் நிறை வேற்றப்படும் தகவல் செயலாக்கத்தின் ஒரு வடிவம். பகிர்ந்தமை செயலாக்கம் பொதுவாக இரண்டு வகைப்படும். 1. சாதாரண பகிர்ந்தமை செயலாக்கம். 2. உண்மையான தகவல் செயலாக்கம். சாதாரணத் தகவல் செயலாக்கத்தில், பணிச் சுமையானது, தமக்குள்ளே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. உண்மையான பகிர்ந்தமை செயலாக்கத்தில், பல்