பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.dk

150

.do


நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

.dk:.டிகே:இணையத்தில்,ஒர் இணைய தளம் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

.dll:டிஎல்எல்:விண்டோஸ் இயக்க முறையில் பயன்படுத்தப்படும் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயங்குநிலை தொடுப்பு நூலகக் கோப்பு என்று பொருள்படும் Dynamic Link Library என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

DLC:டிஎல்சி:தகவல் தொடர்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Data Link Controlஎன்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்தில் பருநிலையில் இணைக்கப்பட்ட இரண்டு கணுக் கணினிகளிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்யும் நெறிமுறை,எஸெஏ(SNA-Systems Network Architecture)அமைப்பில் பயன்படுத்தப்படுகிறது.

DMA:டிஎம்ஏ:Direct Memory Access என்பதன் முதலெழுத்துக் குறும் பெயர். இதற்கு நேரடி நினைவக அணுகல் என்பது பொருளாகும்.

DMTF:டிஎம்டீஎஃப்:மேசைக் கணினி மேலாண்மைப் முனைப்புக் குழு என்று பொருள்படும் Desktop Management Task Forc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பயனாளர் மற்றும் தொழில் துறைத் தேவைகளுக்காக பீசி அடிப்படையிலான தன்னந்தனிக் கணினி மற்றும் பிணைய அமைப்புகளுக் கான தர வரையறைகளை உருவாக்குவதற்கென 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டமைப்பு.

DNS:டிஎன்எஸ்: 1. களப்பெயர் முறைமை என்று பொருள்படும் Domain Name System என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் களப்பெயர்(md2.vsnl.net.in) மற்றும் ஐபீ முகவரி(202.54.6.30) இவற்றை உடைய அமைப்பு. களப்பெயர் எளிதாகப் புரியக் கூடியது.பயனாளர்கள் பயன் படுத்துவது.இப்பெயர் தாமாகவே ஐ.பீ முகவரியாக மாற்றப்பட்டு இணையத்தின் தகவல் போக்கு வரத்துக்குப் பயன்படுத்தப்படும். 2.களப்பெயர் சேவை எனப்பொருள் படும் Domain Name Service என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். களப்பெயர்முறைமையை நடைமுறைப்படுத்தும் இணையப் பயன்பாடு. டிஎன்எஸ் வழங்கன்கள்(பெயர் வழங்கன் என்றும் அழைக்கப் படுவதுண்டு) களப்பெயரும் அதற்கிணையான ஐபி முகவரியும் இணைந்த ஒர் அட்டவணையைக் கொண்டுள்ளன.

DNS server:டிஎன்எஸ் வழங்கன்:களப் பெயர் சேவையைக் கவனித்துக் கொள்ளும் ஒரு கணினி.இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் பெயர்களையும் அதற்கிணையான ஐபி முகவரிகளையும் கொண்ட அட்டவணையை வைத்துள்ளன.microsoft.com என்பது இணையத்திலுள்ள ஒரு களப்பெயர் எனில்,அதற்குரிய நிறுவனக் கணினியின் ஐபி முகவரியைத் தரும்.

.do: டிஒ:இணையத்தில் ஒர் இணைய தளம் டொமினிக்கன்